இணை வசன வேதாகமம்

Click to Subscribe

வெளிப்படுத்தல் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.வெளிப் 5:1 வெளிப் 5:9 வெளிப் 6:1 வெளிப் 6:3 வெளிப் 6:5 வெளிப் 6:7 வெளிப் 6:9 வெளிப் 6:12
2பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங்கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.வெளிப் 15:1 வெளிப் 16:1 மத் 18:10 லூக் 1:19
3வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.வெளிப் 7:2 வெளிப் 10:1 ஆதி 48:15 ஆதி 48:16 யாத் 3:2-18 அப் 7:30-32
4அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.வெளிப் 8:3 வெளிப் 15:8 யாத் 30:1 சங் 141:2 லூக் 1:10
5பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.வெளிப் 16:1-21 ஏசா 66:6 ஏசா 66:14-16 எரே 51:11 எசே 10:2-7 லூக் 12:49
6அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.வெளிப் 8:2
7முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.வெளிப் 16:21 யாத் 9:23-25 யாத் 9:33-25 யோசு 10:11 சங் 11:5 சங் 11:6 சங் 18:12 சங் 18:13 சங் 78:47 சங் 78:48 சங் 105:32 ஏசா 28:2 ஏசா 29:6 ஏசா 30:30 ஏசா 32:19 எசே 13:10-15 எசே 38:22 மத் 7:25-27
8இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதனால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.எரே 51:25 மாற் 11:23
9சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.வெளிப் 8:7 வெளிப் 8:10 வெளிப் 8:12 வெளிப் 16:3 யாத் 7:21 சகரி 13:8
10மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.வெளிப் 1:20 வெளிப் 6:13 வெளிப் 9:1 வெளிப் 12:4 ஏசா 14:12 லூக் 10:18 யூதா 1:13
11அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப் போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.உபா 29:18 ரூத் 1:20 நீதி 5:4 எரே 9:15 எரே 23:15 புலம் 3:5 புலம் 3:19 ஆமோ 5:7 ஆமோ 6:12 எபிரெ 12:15
12நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.வெளிப் 16:8 வெளிப் 16:9 ஏசா 13:10 ஏசா 24:23 எரே 4:23 எசே 32:7 எசே 32:8 யோவே 2:10 யோவே 2:31 ஆமோ 8:9 மத் 24:29 மத் 27:45 மாற் 13:24 மாற் 15:33 லூக் 21:25 லூக் 23:44 லூக் 23:45 அப் 2:20
13பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.வெளிப் 14:3 வெளிப் 14:6 வெளிப் 19:17 சங் 103:20 எபிரெ 1:14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.