| 1 | இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. | வெளிப் 17:1 |
| 2 | அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. | வெளிப் 1:15 வெளிப் 5:2 வெளிப் 10:3 வெளிப் 14:15 எரே 25:30 யோவே 3:16 |
| 3 | அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். | வெளிப் 18:9 வெளிப் 14:8 வெளிப் 17:2 எரே 51:7 |
| 4 | பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். | ஆதி 19:12 ஆதி 19:13 எண் 16:26 எண் 16:27 ஏசா 48:20 ஏசா 52:11 எரே 50:8 எரே 51:6 எரே 51:45 எரே 51:50 மத் 24:15 மத் 24:16 2கொரி 6:17 |
| 5 | அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார். | ஆதி 18:20 ஆதி 18:21 2நாளா 28:9 எஸ்றா 9:6 எரே 51:9 யோனா 1:2 |
| 6 | அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். | வெளிப் 13:10 வெளிப் 16:5 வெளிப் 16:6 யாத் 21:23-25 சங் 137:8 எரே 50:15 எரே 50:29 எரே 51:24 எரே 51:49 2தீமோ 4:14 |
| 7 | அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். | ஏசா 22:12-14 ஏசா 47:1 ஏசா 47:2 ஏசா 47:7-9 எசே 28:2-10 செப் 2:15 2தெச 2:4-8 |
| 8 | ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர். | வெளிப் 18:10 வெளிப் 18:17 வெளிப் 18:19 ஏசா 47:9-11 எரே 51:6 |
| 9 | அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி, | வெளிப் 18:3 வெளிப் 18:7 வெளிப் 17:2 வெளிப் 17:12 வெளிப் 17:13 |
| 10 | அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள். | எண் 16:34 |
| 11 | பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும், | வெளிப் 18:3 வெளிப் 18:9 வெளிப் 18:15 வெளிப் 18:20 வெளிப் 18:23 வெளிப் 13:16 வெளிப் 13:17 ஏசா 23:1-15 ஏசா 47:15 எசே 26:17-21 எசே 27:27-36 செப் 1:11 செப் 1:18 |
| 12 | சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், | வெளிப் 17:4 1இரா 10:11 1இரா 10:12 நீதி 8:10 நீதி 8:11 எசே 27:5-25 |
| 13 | இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள். | 1இரா 10:10 1இரா 10:15 1இரா 10:25 2நாளா 9:9 நீதி 7:17 உன்ன 1:3 உன்ன 4:13 உன்ன 4:14 உன்ன 5:5 ஆமோ 6:6 யோவா 12:3-8 |
| 14 | உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை. | எண் 11:4 எண் 11:34 சங் 78:18 சங் 106:14 1கொரி 10:6 யாக் 4:2 1யோவா 2:16 1யோவா 2:17 |
| 15 | இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று; | வெளிப் 18:3 வெளிப் 18:11 ஓசி 12:7 ஓசி 12:8 சகரி 11:5 மாற் 11:17 அப் 16:19 அப் 19:24-27 |
| 16 | ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். | வெளிப் 18:10 வெளிப் 18:11 வெளிப் 17:4 லூக் 16:19-31 |
| 17 | மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரைபண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று, | வெளிப் 18:10 ஏசா 47:9 எரே 51:8 புலம் 4:6 |
| 18 | அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, | வெளிப் 18:9 |
| 19 | தங்கள் தலைகள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள். | யோசு 7:6 1சாமு 4:12 2சாமு 13:19 நெகே 9:1 யோபு 2:12 எசே 27:30 |
| 20 | பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான். | வெளிப் 19:1-3 நியா 5:31 சங் 48:11 சங் 58:10 சங் 96:11-13 சங் 107:42 சங் 109:28 நீதி 11:10 ஏசா 44:23 ஏசா 49:13 எரே 51:47 எரே 51:48 |
| 21 | அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும். | யாத் 15:5 நெகே 9:11 எரே 51:63 எரே 51:64 |
| 22 | சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. | ஏசா 24:8 ஏசா 24:9 எரே 7:34 எரே 16:9 எரே 25:10 எரே 33:11 எசே 26:13 |
| 23 | விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே. | வெளிப் 22:5 யோபு 21:17 நீதி 4:18 நீதி 4:19 நீதி 24:20 |
| 24 | தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான். | வெளிப் 11:7 வெளிப் 16:6 வெளிப் 17:6 வெளிப் 19:2 எரே 2:34 எசே 22:9 எசே 22:12 எசே 22:27 தானி 7:21 மத் 23:27 லூக் 11:47-51 அப் 7:52 1தெச 2:15 |