| 1 | சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். | தானி 2:28 தானி 2:29 ஆமோ 3:7 ரோம 16:25 கலா 1:12 எபே 3:3 |
| 2 | இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். | வெளிப் 1:9 வெளிப் 6:9 வெளிப் 12:11 வெளிப் 12:17 யோவா 1:32 யோவா 12:17 யோவா 19:35 யோவா 21:24 1கொரி 1:6 1கொரி 2:1 1யோவா 5:7-11 3யோவா 1:12 |
| 3 | இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. | வெளிப் 22:7 நீதி 8:34 தானி 12:12 தானி 12:13 லூக் 11:28 |
| 4 | யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், | வெளிப் 1:1 |
| 5 | உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. | வெளிப் 3:14 சங் 89:36 சங் 89:37 ஏசா 55:4 யோவா 3:11 யோவா 3:32 யோவா 8:14-16 யோவா 18:37 1தீமோ 6:13 1யோவா 5:7-10 |
| 6 | நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். | வெளிப் 5:10 வெளிப் 20:6 யாத் 19:6 ஏசா 61:6 ரோம 12:1 1பேது 2:5-9 |
| 7 | இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். | வெளிப் 14:14-16 சங் 97:2 ஏசா 19:1 தானி 7:13 நாகூ 1:3 மத் 24:30 மத் 26:64 மாற் 13:26 மாற் 14:62 லூக் 21:27 அப் 1:9-11 1தெச 4:17 |
| 8 | இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். | வெளிப் 1:11 வெளிப் 1:17 வெளிப் 2:8 வெளிப் 21:6 வெளிப் 22:13 ஏசா 41:4 ஏசா 43:10 ஏசா 44:6 ஏசா 48:12 |
| 9 | உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். | வெளிப் 1:4 |
| 10 | கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். | வெளிப் 4:2 வெளிப் 17:3 வெளிப் 21:10 மத் 22:43 அப் 10:10-33 2கொரி 12:2-4 |
| 11 | அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. | வெளிப் 1:8 வெளிப் 1:17 |
| 12 | அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், | எசே 43:5 எசே 43:6 மீகா 6:9 |
| 13 | அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி, தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். | வெளிப் 14:14 எசே 1:26-28 தானி 7:9 தானி 7:13 தானி 10:5 தானி 10:6 தானி 10:16 பிலிப் 2:7 பிலிப் 2:8 எபிரெ 2:14-17 எபிரெ 4:15 |
| 14 | அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; | தானி 7:9 மத் 28:3 |
| 15 | அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. | வெளிப் 2:18 எசே 1:7 எசே 40:3 தானி 10:6 |
| 16 | தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. | வெளிப் 1:20 வெளிப் 2:1 வெளிப் 3:1 வெளிப் 12:1 யோபு 38:7 தானி 8:10 தானி 12:3 |
| 17 | நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; | எசே 1:28 தானி 8:18 தானி 10:8 தானி 10:9 தானி 10:17-19 ஆபகூ 3:16 மத் 17:2-6 யோவா 13:23 யோவா 21:20 |
| 18 | மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். | யோபு 19:25 சங் 18:46 யோவா 14:19 ரோம 6:9 2கொரி 13:4 கலா 2:20 கொலோ 3:3 எபிரெ 7:25 |
| 19 | நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; | வெளிப் 1:11 வெளிப் 1:12-20 |
| 20 | என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். | மத் 13:11 லூக் 8:10 |