| 1 | நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். | உபா 3:21 உபா 3:22 உபா 7:1 |
| 2 | நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்து வந்து, ஜனங்களிடத்தில் பேசி: | எண் 10:8 எண் 10:9 எண் 31:6 நியா 20:27 நியா 20:28 1சாமு 14:18 1சாமு 30:7 1சாமு 30:8 2நாளா 13:12 |
| 3 | இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். | சங் 27:1-3 ஏசா 35:3 ஏசா 35:4 ஏசா 41:10-14 மத் 10:16 மத் 10:28 மத் 10:31 எபே 6:11-18 1தெச 5:15 எபிரெ 12:12 எபிரெ 12:13 வெளிப் 2:10 |
| 4 | உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும். | உபா 1:30 உபா 3:22 உபா 11:25 உபா 32:30 யாத் 14:14 யோசு 10:42 யோசு 23:10 2நாளா 13:12 2நாளா 32:7 2நாளா 32:8 சங் 144:1 சங் 144:2 ரோம 8:37 |
| 5 | அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைப்பண்ணவேண்டியதாகும். | உபா 1:15 உபா 16:18 எண் 31:14 எண் 31:48 1சாமு 17:18 |
| 6 | திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும். | உபா 28:1-30 லேவி 19:23-25 எரே 31:5 |
| 7 | ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும். | உபா 22:23-25 உபா 24:5 மத் 1:18 |
| 8 | பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும். | உபா 1:28 உபா 23:9 நியா 7:3 லூக் 9:62 அப் 15:37 அப் 15:38 வெளிப் 3:16 வெளிப் 21:8 |
| 9 | அதிபதிகள் ஜனங்களோடே பேசி முடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள். |
| 10 | நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். | 2சாமு 20:18-22 ஏசா 57:19 சகரி 9:10 லூக் 10:5 லூக் 10:6 அப் 10:36 2கொரி 5:18-21 2கொரி 6:1 எபே 2:17 |
| 11 | அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். | லேவி 25:42-46 யோசு 9:22 யோசு 9:23 யோசு 9:27 யோசு 11:19 யோசு 11:20 யோசு 16:10 நியா 1:28 நியா 1:30-35 1இரா 9:21 1இரா 9:22 சங் 120:7 லூக் 19:14 |
| 12 | அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, |
| 13 | உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, | எண் 31:7-9 எண் 31:17-9 எண் 31:18-9 1இரா 11:15 1இரா 11:16 சங் 2:6-12 சங் 21:8 சங் 21:9 சங் 110:1 லூக் 19:27 2தெச 1:7-9 |
| 14 | ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. | எண் 31:9 எண் 31:12 எண் 31:18 எண் 31:35-54 யோசு 8:2 யோசு 11:14 2நாளா 14:13-15 2நாளா 20:25 சங் 68:12 ரோம 8:37 |
| 15 | இந்த ஜாதிகளைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக. |
| 16 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், | உபா 7:1-4 உபா 7:16-4 எண் 21:2 எண் 21:3 எண் 21:35 எண் 33:52 யோசு 6:17-21 யோசு 9:24 யோசு 9:27 யோசு 10:28 யோசு 10:40 யோசு 11:11 யோசு 11:12 யோசு 11:14 |
| 17 | அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். | ஏசா 34:5 ஏசா 34:6 எரே 48:10 எரே 50:35-40 எசே 38:21-23 வெளிப் 19:18 |
| 18 | அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும். | உபா 7:4 உபா 7:5 உபா 12:30 உபா 12:31 உபா 18:19 யாத் 23:33 யோசு 23:13 நியா 2:3 சங் 106:34-40 1கொரி 15:33 2கொரி 6:17 எபே 5:11 2தெச 3:14 1தீமோ 6:5 2தீமோ 2:17 2தீமோ 2:18 வெளிப் 18:3-5 |
| 19 | நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேகநாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள். | மத் 3:10 மத் 7:15-20 மத் 21:19 லூக் 13:7-9 யோவா 15:2-8 |
| 20 | புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம் போடலாம். | உபா 1:28 2நாளா 26:15 பிரச 9:14 ஏசா 37:33 எரே 6:6 எரே 33:4 எசே 17:17 |