| 1 | உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: | 1இரா 13:18 ஏசா 9:15 எரே 6:13 எரே 23:11 எசே 13:2 எசே 13:3 எசே 13:23 சகரி 13:4 மத் 7:15 மத் 24:11 லூக் 6:26 2பேது 2:1 1யோவா 4:1 |
| 2 | நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், | உபா 18:22 யாத் 7:22 1இரா 13:3 எரே 28:9 மத் 7:22 மத் 7:23 மத் 24:24 2கொரி 11:13-15 2தெச 2:9-11 வெளிப் 13:13 வெளிப் 13:14 |
| 3 | அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். | ஏசா 8:20 அப் 17:11 எபே 4:14 1யோவா 4:1 |
| 4 | நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. | உபா 6:13 2இரா 23:3 2நாளா 34:31 மீகா 6:8 லூக் 1:6 கொலோ 1:10 1தெச 4:1 1தெச 4:2 |
| 5 | அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக. | உபா 18:20 1இரா 18:40 ஏசா 9:14 ஏசா 9:15 ஏசா 28:17 ஏசா 28:18 எரே 14:15 எரே 28:15-17 எரே 29:21 எரே 29:22 சகரி 13:3 வெளிப் 19:20 |
| 6 | உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, | உபா 17:2 உபா 17:3 உபா 28:54 ஆதி 16:5 நீதி 5:20 நீதி 18:24 மீகா 7:5-7 மத் 12:48-50 2கொரி 5:16 |
| 7 | உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால், |
| 8 | நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும், | யாத் 20:3 நீதி 1:10 கலா 1:8 கலா 1:9 1யோவா 5:21 |
| 9 | அவனைக் கொலை செய்துபோட வேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது. | உபா 17:2-7 மத் 10:37 லூக் 14:26 |
| 10 | அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய். | உபா 21:21 லேவி 20:2 லேவி 20:27 லேவி 24:14-16 லேவி 24:23-16 எண் 15:35 எண் 15:36 யோசு 7:25 2நாளா 24:21 |
| 11 | இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள். | உபா 17:13 உபா 19:20 நீதி 19:25 நீதி 21:11 1தீமோ 5:20 |
| 12 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்ட மனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு, | யோசு 22:11-34 நியா 20:1 நியா 20:2-17 |
| 13 | நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, | நியா 19:22 நியா 20:13 1சாமு 2:12 1சாமு 10:27 1சாமு 25:17 1சாமு 25:25 2சாமு 16:7 2சாமு 20:1 2சாமு 23:6 1இரா 21:10 1இரா 21:13 2நாளா 13:7 யோவா 8:44 2கொரி 6:15 1யோவா 3:10 |
| 14 | நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால், | உபா 17:4 உபா 10:18 எண் 35:30 ஏசா 11:3 ஏசா 11:4 யோவா 7:24 1தீமோ 5:19 |
| 15 | அந்தப் பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி, | உபா 2:34 உபா 7:2 உபா 7:16 யாத் 22:20 யாத் 23:24 லேவி 27:28 யோசு 6:17-21 யோசு 6:24-21 நியா 20:48 வெளிப் 17:16 வெளிப் 18:18-24 வெளிப் 19:2 வெளிப் 19:3 |
| 16 | அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே, கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது. | யோசு 6:24 |
| 17 | சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், | உபா 7:26 யோசு 6:18 யோசு 7:1 |
| 18 | கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயை செய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார். | உபா 12:25 உபா 12:28 உபா 12:32 சங் 119:6 மத் 6:33 மத் 7:21 மத் 7:24 |