| 1 | எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி: | எண் 22:1 எண் 26:63 எண் 31:12 எண் 33:50 எண் 36:13 |
| 2 | இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும். | லேவி 25:32 லேவி 25:33 யோசு 14:3 யோசு 14:4 யோசு 21:2-42 எசே 45:1-8 எசே 48:8 எசே 48:22 1கொரி 9:10-14 |
| 3 | அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும். | யோசு 21:11 2நாளா 11:14 எசே 45:2 |
| 4 | நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்தொடங்கி, வெளியிலே சுற்றிலும் ஆயிரமுழ தூரத்துக்கு எட்டவேண்டும். |
| 5 | பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறந்தொடங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் மேற்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடக்கடவீர்கள்; இது அவர்கள் பட்டணங்களுக்கு வெளிநிலங்களாயிருப்பதாக. |
| 6 | நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலை செய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கக்கடவீர்கள்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். | எண் 35:13 எண் 35:14 உபா 4:41-43 யோசு 20:2-9 யோசு 21:3 யோசு 21:13 யோசு 21:21 யோசு 21:27 யோசு 21:32 யோசு 21:36 யோசு 21:38 சங் 9:9 சங் 62:7 சங் 62:8 சங் 142:4 சங் 142:5 ஏசா 4:6 மத் 11:28 எபிரெ 6:18 |
| 7 | நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே. | யோசு 21:3-42 1நாளா 6:54-81 |
| 8 | நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார். | ஆதி 49:7 யாத் 32:28 யாத் 32:29 உபா 33:8-11 யோசு 21:3 |
| 9 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 10 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான் தேசத்தில் பிரவேசிக்கும்போது, | எண் 34:2 லேவி 14:34 லேவி 25:2 உபா 12:9 உபா 19:1 உபா 19:2 |
| 11 | கைப்பிசகாய் ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள். | எண் 35:6 யோசு 20:2 |
| 12 | கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது. | எண் 35:19 எண் 35:25-27 உபா 19:6 யோசு 20:3-6 யோசு 20:9-6 2சாமு 14:7 |
| 13 | நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும். |
| 14 | யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம். | உபா 4:41-43 உபா 19:8-10 யோசு 20:7-9 |
| 15 | கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும். | எண் 15:16 யாத் 12:49 லேவி 24:22 ரோம 3:29 கலா 3:28 |
| 16 | ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். | எண் 35:22-24 உபா 19:11-13 |
| 17 | ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும். | யாத் 21:18 |
| 18 | ஒருவன் தன் கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். |
| 19 | பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்று போடலாம். | எண் 35:12 எண் 35:21 எண் 35:24 எண் 35:27 உபா 19:6 உபா 19:12 யோசு 20:3 யோசு 20:5 |
| 20 | ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய் அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலாயினும், | ஆதி 4:5 ஆதி 4:8 2சாமு 3:27 2சாமு 13:22 2சாமு 13:28 2சாமு 13:29 2சாமு 20:10 1இரா 2:5 1இரா 2:6 1இரா 2:31-33 நீதி 26:24 நீதி 28:17 லூக் 4:29 |
| 21 | அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்ட மாத்திரத்தில் கொன்றுபோடலாம். |
| 22 | ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப்பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும், | எண் 35:11 யாத் 21:13 உபா 19:5 யோசு 20:3 யோசு 20:5 |
| 23 | அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்று போடத்தக்க ஒரு கல்லினால் அவனைக்காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால், |
| 24 | அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து, | எண் 35:12 யோசு 20:6 |
| 25 | கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன். | எண் 35:28 யோசு 20:6 ரோம 3:24-26 எபே 2:16-18 எபிரெ 4:14-16 எபிரெ 7:25-28 எபிரெ 9:12-15 எபிரெ 10:19-22 |
| 26 | ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது, |
| 27 | பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக்கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை. | யாத் 22:2 உபா 19:6 உபா 19:10 |
| 28 | கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம். | யோவா 15:4-6 அப் 11:23 அப் 27:31 எபிரெ 3:14 எபிரெ 6:4-8 எபிரெ 10:26-30 எபிரெ 10:39-30 |
| 29 | இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது. | எண் 27:1 எண் 27:11 |
| 30 | எவனாகிலும், ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது. | உபா 17:6 உபா 17:7 உபா 19:15 மத் 18:16 யோவா 8:17 யோவா 8:18 2கொரி 13:1 1தீமோ 5:19 எபிரெ 10:28 வெளிப் 11:3 |
| 31 | சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும் பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும். | ஆதி 9:5 ஆதி 9:6 யாத் 21:14 உபா 19:11-13 2சாமு 12:13 1இரா 2:28-34 சங் 51:14 |
| 32 | தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக்கூடாது. | அப் 4:12 கலா 2:21 கலா 3:10-13 கலா 3:22-13 வெளிப் 5:9 |
| 33 | நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை. | லேவி 18:25 உபா 21:1-8 உபா 21:23-8 2இரா 23:26 2இரா 24:4 சங் 106:28 ஏசா 26:21 எசே 22:24-27 ஓசி 4:2 ஓசி 4:3 மீகா 4:11 மத் 23:31-35 லூக் 11:50 லூக் 11:51 |
| 34 | நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார். | எண் 5:3 லேவி 20:24-26 |