| 1 | பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல். | ஓசி 5:1 மல்கி 2:1 மல்கி 2:4 |
| 2 | தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும், | லேவி 18:6 1தெச 4:13 |
| 3 | புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம். |
| 4 | தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது. | எசே 24:16 எசே 24:17 |
| 5 | அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக. | லேவி 10:6 லேவி 19:27 லேவி 19:28 உபா 14:1 ஏசா 15:2 ஏசா 22:12 எரே 16:6 எரே 48:37 எசே 44:20 ஆமோ 8:10 மீகா 1:16 |
| 6 | தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும். | லேவி 21:8 லேவி 10:3 யாத் 28:36 யாத் 29:44 எஸ்றா 8:28 1பேது 2:9 |
| 7 | அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக. | லேவி 21:8 எசே 44:22 1தீமோ 3:11 |
| 8 | அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக. | லேவி 21:6 யாத் 19:10 யாத் 19:14 யாத் 28:41 யாத் 29:1 யாத் 29:43 யாத் 29:44 |
| 9 | ஆசாரியனுடைய குமாரத்தி, வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள். | 1சாமு 2:17 1சாமு 2:34 1சாமு 3:13 1சாமு 3:14 எசே 9:6 மல்கி 2:3 மத் 11:20-24 1தீமோ 3:4 1தீமோ 3:5 தீத் 1:6 |
| 10 | தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும், | லேவி 8:12 லேவி 10:7 லேவி 16:32 யாத் 29:29 யாத் 29:30 எண் 35:25 சங் 133:2 |
| 11 | பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும், | லேவி 21:1 லேவி 21:2 எண் 6:7 எண் 19:14 உபா 33:9 மத் 8:21 மத் 8:22 மத் 12:46-50 லூக் 9:59 லூக் 9:60 லூக் 14:26 2கொரி 5:16 |
| 12 | பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர். | லேவி 10:7 |
| 13 | கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும். | லேவி 21:7 எசே 44:22 2கொரி 11:2 வெளிப் 14:4 |
| 14 | விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். |
| 15 | அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார். | ஆதி 18:19 எஸ்றா 2:62 எஸ்றா 9:2 நெகே 13:23-29 மல்கி 2:11 மல்கி 2:15 ரோம 11:16 1கொரி 7:14 |
| 16 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 17 | நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது. | லேவி 22:20-25 1தெச 2:10 1தீமோ 3:2 எபிரெ 7:26 |
| 18 | அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும், | ஏசா 56:10 மத் 23:16 மத் 23:17 மத் 23:19 1தீமோ 3:2 1தீமோ 3:3 1தீமோ 3:7 தீத் 1:7 தீத் 1:10 |
| 19 | காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும், |
| 20 | கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது. | உபா 23:1 |
| 21 | ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது. | லேவி 21:6 லேவி 21:8 லேவி 21:17 |
| 22 | அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம். | லேவி 2:3 லேவி 2:10 லேவி 6:16 லேவி 6:17 லேவி 6:29 லேவி 7:1 லேவி 24:8 லேவி 24:9 எண் 18:9 எண் 18:10 |
| 23 | ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார். | யாத் 30:6-8 யாத் 40:26 யாத் 40:27 எசே 44:9-14 |
| 24 | மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான். | மல்கி 2:1-7 கொலோ 4:17 1தீமோ 1:18 2தீமோ 2:2 |