| 1 | பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டுவரக்கடவர்கள் என்று சொன்னார். | எசே 43:6 எசே 43:7 ஏசா 6:8 ஆமோ 3:7 ஆமோ 3:8 வெளிப் 1:10 வெளிப் 1:11 வெளிப் 14:7 |
| 2 | அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள். | எரே 1:15 எரே 5:15-17 எரே 8:16 எரே 8:17 எரே 25:9 |
| 3 | அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு, | எசே 3:23 எசே 8:4 எசே 10:4 எசே 11:22 எசே 11:23 எசே 43:2-4 |
| 4 | கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். | யாத் 12:7 யாத் 12:13 மல்கி 3:16 2கொரி 1:22 எபே 4:30 2தீமோ 2:19 வெளிப் 7:2 வெளிப் 7:3 வெளிப் 9:4 வெளிப் 13:6 வெளிப் 13:7 வெளிப் 14:1 வெளிப் 20:4 |
| 5 | பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், | 1சாமு 9:15 ஏசா 5:9 ஏசா 22:14 |
| 6 | முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள். | எண் 31:15-17 உபா 2:34 உபா 3:6 யோசு 6:17-21 1சாமு 15:3 2நாளா 36:17 |
| 7 | அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள். | எசே 7:20-22 2நாளா 36:17 சங் 79:1-3 புலம் 2:4-7 லூக் 13:1 |
| 8 | அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான் மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன். | எண் 14:5 எண் 16:4 எண் 16:21 எண் 16:22 எண் 16:45 உபா 9:18 யோசு 7:6 1நாளா 21:16 எஸ்றா 9:5 |
| 9 | அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள். | எசே 7:23 எசே 22:2-12 எசே 22:25-31 உபா 31:29 உபா 32:5 உபா 32:15-22 2இரா 17:7-23 2நாளா 36:14-16 ஏசா 1:4 ஏசா 59:2-8 ஏசா 59:12-15 எரே 5:1-9 எரே 7:8 எரே 7:9 மீகா 3:9-12 செப் 3:1-4 |
| 10 | ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார். | எசே 9:5 எசே 5:11 எசே 7:4 எசே 8:18 எசே 21:31 எசே 21:32 |
| 11 | இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான். | சங் 103:20 ஏசா 46:10 ஏசா 46:11 சகரி 1:10 சகரி 1:11 சகரி 6:7 சகரி 6:8 வெளிப் 16:2 வெளிப் 16:17 |