| 1 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | எசே 12:22 எசே 21:2 எசே 40:2 2நாளா 34:7 |
| 2 | மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது. |
| 3 | இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன். | எசே 7:8 எசே 7:9 எசே 5:13 எசே 6:3-7 எசே 6:12-7 எசே 6:13-7 |
| 4 | என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். | எசே 7:9 எசே 5:11 எசே 8:18 எசே 9:10 எசே 24:14 எரே 13:14 சகரி 11:6 |
| 5 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது. | எசே 5:9 2இரா 21:12 2இரா 21:13 தானி 9:12 ஆமோ 3:2 நாகூ 1:9 மத் 24:21 |
| 6 | முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது. | எசே 7:3 எரே 44:27 |
| 7 | தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை. | ஆதி 19:15 ஆதி 19:24 ஏசா 17:14 ஆமோ 4:13 |
| 8 | இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன். | எசே 9:8 எசே 14:19 எசே 20:8 எசே 20:13 எசே 20:21 எசே 20:33 எசே 22:31 எசே 30:15 எசே 36:18 2நாளா 34:21 சங் 79:6 ஏசா 42:25 எரே 7:20 புலம் 2:4 புலம் 4:11 தானி 9:11 தானி 9:27 ஓசி 5:10 நாகூ 1:6 வெளிப் 14:10 வெளிப் 16:2-21 |
| 9 | என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புக்களுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். | ஏசா 9:13 மீகா 6:9 கலா 6:7 வெளிப் 20:13 |
| 10 | இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது. | எசே 7:6 1தெச 5:3 |
| 11 | அக்கிரமத்துக்கு மிலாறாகக்கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை. | எசே 7:23 ஏசா 5:7 ஏசா 9:4 ஏசா 14:29 ஏசா 59:6-8 எரே 6:7 ஆமோ 3:10 ஆமோ 6:3 மீகா 2:2 மீகா 3:3 மீகா 6:12 யாக் 2:13 |
| 12 | அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பின்மேலும் உக்கிரம் இறங்கும். | எசே 7:5-7 எசே 7:10-7 1கொரி 7:29-31 யாக் 5:8 யாக் 5:9 |
| 13 | அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான். | பிரச 8:8 லேவி 25:24-28 லேவி 25:31-28 |
| 14 | அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது. | எரே 4:5 எரே 6:1 எரே 51:27 |
| 15 | வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும். | எசே 5:12 உபா 32:23-25 எரே 14:18 எரே 15:2 எரே 15:3 புலம் 1:20 |
| 16 | அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள். | எசே 6:8 எஸ்றா 9:15 ஏசா 1:9 ஏசா 37:31 எரே 44:14 எரே 44:28 |
| 17 | எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும். | எசே 21:7 ஏசா 13:7 ஏசா 13:8 எரே 6:24 எபிரெ 12:12 |
| 18 | இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும். | ஏசா 3:24 ஏசா 15:2 ஏசா 15:3 எரே 48:37 ஆமோ 8:10 |
| 19 | தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது. | 2இரா 7:7 2இரா 7:8 2இரா 7:15 நீதி 11:4 ஏசா 2:20 ஏசா 30:22 செப் 1:18 மத் 16:26 |
| 20 | அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டுபண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி, | எசே 24:21 1நாளா 29:1 1நாளா 29:2 2நாளா 2:9 2நாளா 3:1-17 எஸ்றா 3:12 சங் 48:2 சங் 50:2 சங் 87:2 சங் 87:3 ஏசா 64:11 ஆகா 2:3 |
| 21 | அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். | 2இரா 24:13 2இரா 25:9 2இரா 25:13-16 2நாளா 36:18 2நாளா 36:19 சங் 74:2-8 சங் 79:1 எரே 52:13-23 |
| 22 | என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். | சங் 10:11 சங் 35:22 சங் 74:10 சங் 74:11 சங் 74:18-23 எரே 18:17 |
| 23 | ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது. | எசே 19:3-6 எரே 27:2 எரே 40:1 புலம் 3:7 நாகூ 3:10 |
| 24 | ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர்களை வரப்பண்ணுவேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும். | எசே 21:31 எசே 28:7 சங் 106:41 எரே 4:7 எரே 12:12 ஆபகூ 1:6-10 |
| 25 | சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது. | ஏசா 57:21 ஏசா 59:8-12 எரே 8:15 எரே 8:16 புலம் 4:17 புலம் 4:18 மீகா 1:12 |
| 26 | விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும். | லேவி 26:18 லேவி 26:21 லேவி 26:24 லேவி 26:28 உபா 32:23 எரே 4:20 |
| 27 | ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார். | எசே 12:10-22 எசே 17:15-21 எசே 21:25 எரே 52:8-11 |