| 1 | கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும், | யாத் 1:1-5 எண் 1:5-15 எண் 13:4-15 வெளிப் 7:4-8 |
| 2 | தாணின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும், | ஆதி 30:12 ஆதி 30:13 யோசு 19:24-31 |
| 3 | ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும், | ஆதி 30:7 ஆதி 30:8 யோசு 19:32-39 |
| 4 | நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும், | ஆதி 30:22-24 ஆதி 41:51 ஆதி 48:5 ஆதி 48:14-20 யோசு 13:29-31 யோசு 17:1-11 |
| 5 | மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும், | யோசு 16:1-10 யோசு 17:8-10 யோசு 17:14-18 |
| 6 | எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும், | ஆதி 29:32 ஆதி 49:3 ஆதி 49:4 யோசு 13:15-21 |
| 7 | ரூபனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக. | ஆதி 29:35 யோசு 15:1-63 யோசு 19:9 |
| 8 | யூதாவின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; இது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. | எசே 45:1-6 |
| 9 | இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக. |
| 10 | வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. | எசே 44:28 எசே 45:4 எண் 35:1-9 யோசு 21:1-45 மத் 10:10 1கொரி 9:13 1கொரி 9:14 |
| 11 | இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும். | எசே 40:46 எசே 43:19 எசே 44:15 எசே 44:16 |
| 12 | அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக. | எசே 45:4 லேவி 27:21 |
| 13 | ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக. | எசே 45:3 உபா 12:19 லூக் 10:7 |
| 14 | அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. | யாத் 22:29 லேவி 27:10 லேவி 27:28 லேவி 27:33 |
| 15 | இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக. | எசே 22:26 எசே 42:20 எசே 44:23 எசே 45:6 |
| 16 | அதின் அளவுகளாவன; வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம். |
| 17 | நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக. |
| 18 | பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக. | யோசு 9:27 எஸ்றா 2:43-58 நெகே 7:46-62 |
| 19 | இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள். | எசே 45:6 1இரா 4:7-23 நெகே 11:1-36 |
| 20 | அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம் சதுரமாய் இருக்கவேண்டும். | எபிரெ 12:17 வெளிப் 21:16 |
| 21 | பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும். | எசே 48:22 எசே 34:23 எசே 34:24 எசே 37:24 எசே 45:7 எசே 45:8 ஓசி 1:11 |
| 22 | அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது. |
| 23 | மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும், | எசே 48:1-7 ஆதி 35:16-19 யோசு 18:21-28 |
| 24 | பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும், | ஆதி 29:33 ஆதி 49:5-7 யோசு 19:1-9 |
| 25 | சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும், | ஆதி 30:14-18 யோசு 19:17-23 |
| 26 | இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும், | ஆதி 30:19 ஆதி 30:20 யோசு 19:10-16 |
| 27 | செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக. | ஆதி 30:10 ஆதி 30:11 யோசு 13:24-28 |
| 28 | காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும். | எசே 47:19 2நாளா 20:2 |
| 29 | சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 47:13-22 எண் 34:2 எண் 34:13 யோசு 13:1-21 |
| 30 | நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும். | எசே 48:16 எசே 48:32-35 வெளிப் 21:16 |
| 31 | நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. | ஏசா 26:1 ஏசா 26:2 ஏசா 54:12 ஏசா 60:11 வெளிப் 21:12 வெளிப் 21:13 வெளிப் 21:21 வெளிப் 21:25 |
| 32 | கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. |
| 33 | தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. |
| 34 | மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. |
| 35 | சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும். | ஆதி 22:14 எரே 33:16 சகரி 14:21 |