| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 2 | மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். | எசே 33:24 எரே 2:8 எரே 3:15 எரே 10:21 எரே 12:10 யோவா 10:1 யோவா 10:2 யோவா 10:12 |
| 3 | நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள். | ஏசா 56:11 ஏசா 56:12 சகரி 11:5 சகரி 11:16 |
| 4 | நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள். | எசே 34:16 ஏசா 56:10 எரே 8:22 சகரி 11:15 சகரி 11:16 மத் 9:36 எபிரெ 12:12 |
| 5 | மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின. | எசே 34:6 எசே 33:21 எசே 33:28 1இரா 22:17 2நாளா 18:16 எரே 23:2 எரே 50:6 எரே 50:17 சகரி 13:7 மத் 9:36 |
| 6 | என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. | எசே 7:16 எரே 13:16 எரே 40:11 எரே 40:12 எபிரெ 11:37 எபிரெ 11:38 1பேது 2:25 |
| 7 | ஆகையால், மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். | எசே 34:9 சங் 82:1-7 ஏசா 1:10 எரே 13:13 எரே 13:18 எரே 22:2 எரே 22:3 மீகா 3:8 மீகா 3:9 மல்கி 2:1 மத் 23:13-36 லூக் 11:39-54 |
| 8 | கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். | எசே 34:5 எசே 34:6 எசே 34:31 |
| 9 | ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். |
| 10 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு. | எசே 5:8 எசே 13:8 எசே 21:3 எசே 35:3 எரே 21:13 எரே 50:31 நாகூ 2:13 சகரி 10:3 1பேது 3:12 |
| 11 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். | எசே 5:8 எசே 6:3 ஆதி 6:17 லேவி 26:28 உபா 32:39 ஏசா 45:12 ஏசா 48:15 ஏசா 51:12 ஓசி 5:14 |
| 12 | ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி, | 1சாமு 17:34 1சாமு 17:35 லூக் 15:4-6 யோவா 10:11 யோவா 10:12 |
| 13 | அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன். | எசே 11:17 எசே 20:41 எசே 28:25 எசே 28:26 எசே 36:24 எசே 37:21 எசே 37:22 எசே 38:8 எசே 39:27 சங் 106:47 ஏசா 11:11-16 ஏசா 65:9 ஏசா 65:10 ஏசா 66:19 ஏசா 66:20 எரே 23:3 எரே 23:4 எரே 23:8 எரே 30:3 எரே 30:18 எரே 31:8 எரே 32:37 ஆமோ 9:14 செப் 3:19 செப் 3:20 |
| 14 | அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். | எசே 34:27 சங் 23:1 சங் 23:2 சங் 31:8-10 ஏசா 25:6 ஏசா 30:23 ஏசா 30:24 ஏசா 40:11 எரே 31:12-14 எரே 31:25-14 யோவா 10:9 வெளிப் 7:16 |
| 15 | என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | சங் 23:2 உன்ன 1:7 உன்ன 1:8 ஏசா 11:6 ஏசா 11:7 ஏசா 27:10 ஏசா 65:9 ஏசா 65:10 எரே 3:15 ஓசி 2:18 செப் 3:13 யோவா 21:15 |
| 16 | நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். | எசே 34:4 எசே 34:11 ஏசா 40:11 ஏசா 61:1-3 மீகா 4:6 மீகா 4:7 மத் 15:24 மத் 18:11-14 மாற் 2:17 லூக் 5:31 லூக் 5:32 லூக் 15:4-7 லூக் 19:10 |
| 17 | என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். | எசே 34:20-22 எசே 20:37 எசே 20:38 சகரி 10:3 மத் 25:32 மத் 25:33 |
| 18 | நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா? | எசே 16:20 எசே 16:47 ஆதி 30:15 எண் 16:9 எண் 16:13 2சாமு 7:19 ஏசா 7:13 |
| 19 | என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ? |
| 20 | ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். | எசே 34:10 எசே 34:17 சங் 22:12-16 மத் 25:31-46 |
| 21 | நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியினாலே, | எசே 34:3-5 தானி 8:3-10 சகரி 11:5 சகரி 11:16 சகரி 11:17 |
| 22 | நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். | எசே 34:10 சங் 72:12-14 எரே 23:2 எரே 23:3 சகரி 11:7-9 |
| 23 | அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார். | பிரச 12:11 ஏசா 40:11 எரே 23:4-6 மீகா 5:2-5 சகரி 13:7 யோவா 10:11 எபிரெ 13:20 1பேது 2:25 1பேது 5:4 |
| 24 | கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். | எசே 34:30 எசே 34:31 எசே 36:28 எசே 37:23 எசே 37:27 எசே 39:22 யாத் 29:45 யாத் 29:46 ஏசா 43:2 ஏசா 43:3 எரே 31:1 எரே 31:33 எரே 32:38 சகரி 13:9 வெளிப் 21:3 |
| 25 | நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள். | எசே 37:26 ஏசா 55:3 எரே 31:31-33 சகரி 6:13 எபிரெ 13:20 |
| 26 | நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். | ஆதி 12:2 ஏசா 19:24 சகரி 8:13 சகரி 8:23 |
| 27 | வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 47:12 லேவி 26:4 சங் 85:12 சங் 92:12-14 ஏசா 4:2 ஏசா 35:1 ஏசா 35:2 ஏசா 61:3 யோவா 15:5-8 |
| 28 | இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள். | எசே 34:8 எசே 36:4 எசே 36:15 |
| 29 | நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனித் தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை. | ஏசா 4:2 ஏசா 11:1-6 ஏசா 53:2 எரே 23:5 எரே 33:15 சகரி 3:8 சகரி 6:12 |
| 30 | தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தாராகிய தாங்கள் என் ஜனமாயிருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 34:24 எசே 16:62 எசே 37:27 சங் 46:7 சங் 46:11 ஏசா 8:9 ஏசா 8:10 மத் 1:23 மத் 28:20 |
| 31 | என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 36:38 சங் 78:52 சங் 80:1 சங் 95:7 சங் 100:3 ஏசா 40:11 மீகா 7:14 லூக் 12:32 யோவா 10:11 யோவா 10:16 யோவா 10:26-30 யோவா 20:15-17 அப் 20:28 1பேது 5:2 1பேது 5:3 |