| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: |
| 2 | மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல. | எசே 28:5 எசே 28:17 எசே 31:10 உபா 8:14 2நாளா 26:16 நீதி 16:18 நீதி 18:12 ஏசா 2:12 தானி 5:22 தானி 5:23 ஆபகூ 2:4 1தீமோ 3:6 1பேது 5:5 |
| 3 | இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. | தானி 1:20 தானி 2:48 தானி 5:11 தானி 5:12 சகரி 9:2 சகரி 9:3 |
| 4 | நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய். | எசே 29:3 உபா 8:17 உபா 8:18 நீதி 18:11 நீதி 23:4 நீதி 23:5 பிரச 9:11 ஆபகூ 1:16 சகரி 9:2-4 |
| 5 | உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று. | நீதி 26:12 ஏசா 5:21 ரோம 12:16 |
| 6 | ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், | எசே 28:2 யாத் 9:17 யோபு 9:4 யோபு 40:9-12 1கொரி 10:22 2தெச 2:4 யாக் 1:11 |
| 7 | இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள். | எசே 26:7-14 ஏசா 23:8 ஏசா 23:9 ஆமோ 3:6 |
| 8 | உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய். | எசே 32:18-30 யோபு 17:16 யோபு 33:18 யோபு 33:28 சங் 28:1 சங் 30:9 சங் 55:15 சங் 88:4 சங் 88:5 நீதி 1:12 நீதி 28:17 ஏசா 38:17 |
| 9 | உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே. | எசே 28:2 தானி 4:31 தானி 4:32 தானி 5:23-30 அப் 12:22 அப் 12:23 |
| 10 | மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் சாவதுபோல் சாவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 31:18 எசே 32:19 எசே 32:21 எசே 32:24-30 எசே 44:7 எசே 44:9 லேவி 26:41 1சாமு 17:26 1சாமு 17:36 எரே 6:10 எரே 9:25 எரே 9:26 யோவா 8:24 அப் 7:51 பிலிப் 3:3 |
| 11 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 12 | மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். | எசே 28:2 எசே 19:1 எசே 19:14 எசே 26:17 எசே 27:2 எசே 27:32 எசே 32:2 எசே 32:16 2நாளா 35:25 ஏசா 14:4 எரே 9:17-20 |
| 13 | நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. | எசே 31:8 எசே 31:9 எசே 36:35 ஆதி 2:8 ஆதி 3:23 ஆதி 3:24 ஆதி 13:10 ஏசா 51:3 யோவே 2:3 வெளிப் 2:7 |
| 14 | நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய். | எசே 28:16 யாத் 25:17-20 யாத் 30:26 யாத் 40:9 |
| 15 | நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய். | எசே 28:3-6 எசே 28:12-6 எசே 27:3 எசே 27:4 |
| 16 | உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். | எசே 27:12-36 ஏசா 23:17 ஏசா 23:18 ஓசி 12:7 லூக் 19:45 லூக் 19:46 யோவா 2:16 1தீமோ 6:9 1தீமோ 6:10 |
| 17 | உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன். | எசே 28:2 எசே 28:5 எசே 16:14 எசே 16:15 எசே 31:10 நீதி 11:2 நீதி 16:18 லூக் 14:11 யாக் 4:6 |
| 18 | உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன். | எசே 28:2 எசே 28:13 எசே 28:14 எசே 28:16 |
| 19 | ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 27:35 எசே 27:36 சங் 76:12 ஏசா 14:16-19 வெளிப் 18:9 வெளிப் 18:10 வெளிப் 18:15-19 |
| 20 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 21 | மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சீதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: | எசே 6:2 எசே 25:2 எசே 29:2 |
| 22 | கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 5:8 எசே 21:3 எசே 26:3 எசே 29:3 எசே 29:10 எசே 38:3 எசே 39:1-3 எரே 21:13 எரே 50:31 நாகூ 1:6 நாகூ 2:13 நாகூ 3:5 |
| 23 | நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 5:12 எசே 38:22 எரே 15:2 |
| 24 | இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிற முள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள். | எண் 33:55 யோசு 23:13 நியா 2:3 ஏசா 35:9 ஏசா 55:13 எரே 12:14 மீகா 7:4 2கொரி 12:7 வெளிப் 21:4 |
| 25 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள். | எசே 11:17 எசே 20:41 எசே 34:13 எசே 36:24 எசே 37:21 எசே 39:27 லேவி 26:44 லேவி 26:45 உபா 30:3 உபா 30:4 சங் 106:47 ஏசா 11:12 ஏசா 11:13 ஏசா 27:12 ஏசா 27:13 எரே 30:18 எரே 31:8-10 எரே 32:37 ஓசி 1:11 யோவே 3:7 ஆமோ 9:14 ஆமோ 9:15 ஒபதி 1:17-21 மீகா 7:11-14 செப் 3:19 செப் 3:20 |
| 26 | அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து, நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். | எசே 34:25-28 எசே 38:8 லேவி 25:18 லேவி 25:19 உபா 12:10 எரே 23:6-8 எரே 33:16 ஓசி 2:18 சகரி 2:4 சகரி 2:5 |