| 1 | பதினோராம் வருஷம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | எசே 1:2 எசே 8:1 எசே 20:1 எரே 39:2 |
| 2 | மனுபுத்திரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, ஜனசதளங்களின் ஒலிமுகவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால், | எசே 27:1-28 யோசு 19:29 சங் 83:7 ஏசா 23:1-18 எரே 25:22 எரே 27:3 எரே 47:4 யோவே 3:4 ஆமோ 1:9 ஆமோ 1:10 சகரி 9:2-4 |
| 3 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; சமுத்திரம் தன் அலைகளை எழும்பிவரப்பண்ணுகிறவண்ணமாய் நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக எழும்பிவரப்பண்ணுவேன். | எசே 5:8 எசே 21:3 எசே 28:22 எசே 38:3 எரே 21:13 எரே 50:31 நாகூ 2:12 |
| 4 | அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன். | எசே 26:9 ஏசா 23:11 எரே 5:10 ஆமோ 1:10 சகரி 9:3 |
| 5 | அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; அது ஜாதிகளுக்குக் கொள்ளையாகும். | எசே 26:14 எசே 26:19 எசே 27:32 எசே 47:10 |
| 6 | வெளியில் இருக்கிற அதின் குமாரத்திகளோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 26:8 எசே 16:46 எசே 16:48 எரே 49:2 |
| 7 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன். | எசே 26:3 எசே 28:7 எசே 29:18-20 எசே 30:10 எசே 30:11 எசே 32:11 எசே 32:12 எரே 25:9 எரே 25:22 எரே 27:3-6 |
| 8 | அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால் கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து, | எசே 21:22 2சாமு 20:15 எரே 52:4 |
| 9 | உன் மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான். | 2நாளா 26:15 |
| 10 | அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும்வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரை வீரரும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன் மதில்கள் அதிரும். | எசே 26:7 எரே 47:3 |
| 11 | தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். | ஏசா 5:28 எரே 51:27 ஆபகூ 1:8 |
| 12 | அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள். | எசே 26:5 மத் 6:19 மத் 6:20 |
| 13 | உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை. | எசே 28:13 ஏசா 14:11 ஏசா 22:2 ஏசா 23:7 ஏசா 23:16 ஏசா 24:8 ஏசா 24:9 எரே 7:34 எரே 16:9 எரே 25:10 ஓசி 2:11 ஆமோ 6:4-7 யாக் 5:1-5 வெளிப் 18:22 வெளிப் 18:23 |
| 14 | உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். | எசே 26:4 எசே 26:5 எசே 26:12 |
| 15 | தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ? | எசே 26:18 எசே 27:28 எசே 27:35 எசே 31:16 எசே 32:10 ஏசா 2:19 எரே 49:21 எபிரெ 12:26 எபிரெ 12:27 |
| 16 | கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையலாடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள். | எசே 27:29-36 எசே 32:21-32 ஏசா 14:9-13 ஏசா 23:1-8 வெளிப் 18:11-19 |
| 17 | அவர்கள் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்பெற்ற நகரியே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன் குடிகளோடுங்கூடச் சமுத்திரத்திலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ! | எசே 19:1 எசே 19:14 எசே 27:2 எசே 27:32 எசே 28:12-19 எசே 32:2 எசே 32:16 எரே 6:26 எரே 7:29 எரே 9:20 மீகா 2:4 |
| 18 | நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது சமுத்திரத்திலுள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள். | எசே 26:15 எசே 27:28-30 |
| 19 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழானநகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும், | எசே 26:3 ஏசா 8:7 ஏசா 8:8 தானி 9:26 தானி 11:40 வெளிப் 17:15 |
| 20 | பூர்வகாலத்து ஜனத்தண்டைக்குக் குழியில் இறங்குகிறவர்களோடே நான் உன்னை இறங்கப்பண்ணுவேன்; நீ குடியேறாதிருக்கும்படி பூர்வகாலமுதற்கொண்டு பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்ளோடேகூட நான் உன்னைத் தங்கியிருக்கப்பண்ணுவேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன். | எசே 32:18-32 எசே 34:1-31 எண் 16:30 எண் 16:33 சங் 28:1 ஏசா 14:11-19 லூக் 10:15 |
| 21 | உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார். | எசே 26:15 எசே 26:16 எசே 27:36 எசே 28:19 |