| 1 | கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார். | எரே 13:11 எரே 19:1 எரே 27:2 எசே 4:1-5 எபிரெ 1:1 |
| 2 | நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன். | நீதி 3:5 ஏசா 20:2 எசே 2:8 ஓசி 1:2 ஓசி 1:3 யோவா 13:6 யோவா 13:7 யோவா 15:14 |
| 3 | இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | எரே 13:3 எரே 13:8 |
| 4 | நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார். | எரே 51:63 எரே 51:64 சங் 137:1 மீகா 4:10 |
| 5 | நான் போய், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்து வைத்தேன். | யாத் 39:42 யாத் 39:43 யாத் 40:16 மத் 22:2-6 யோவா 2:5-8 அப் 26:19 அப் 26:20 2தீமோ 2:3 எபிரெ 11:8 எபிரெ 11:17-19 |
| 6 | அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார். |
| 7 | அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக்கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று. | எரே 13:10 எரே 24:1-8 ஏசா 64:6 எசே 15:3-5 சகரி 3:3 சகரி 3:4 லூக் 14:34 லூக் 14:35 ரோம 3:12 பிலேமோ 1:11 |
| 8 | அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: |
| 9 | இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன். | எரே 18:4-6 புலம் 5:5-8 |
| 10 | என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:23 எரே 7:25-28 எரே 8:5 எரே 11:7 எரே 11:18 எரே 15:1 எரே 25:3-7 எரே 34:14-17 எண் 14:11 2நாளா 36:15 2நாளா 36:16 எபிரெ 12:25 |
| 11 | கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | யாத் 19:5 யாத் 19:6 உபா 4:7 உபா 26:18 உபா 32:10-15 சங் 135:4 சங் 147:20 |
| 12 | சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள். | எசே 24:19 |
| 13 | அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி, | எரே 25:15-18 எரே 25:27-18 எரே 51:7 சங் 60:3 சங் 75:8 ஏசா 29:9 ஏசா 49:26 ஏசா 51:17 ஏசா 51:21 ஏசா 63:6 ஆபகூ 2:16 |
| 14 | பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எரே 19:9-11 எரே 48:12 நியா 7:20-22 1சாமு 14:16 2நாளா 20:23 சங் 2:9 ஏசா 9:20 ஏசா 9:21 |
| 15 | நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார். | ஏசா 42:23 யோவே 1:2 வெளிப் 2:29 |
| 16 | அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள். | யோசு 7:19 1சாமு 6:5 சங் 96:7 சங் 96:8 |
| 17 | நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும். | எரே 22:5 மல்கி 2:2 |
| 18 | நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள். | எரே 22:26 2இரா 24:12 2இரா 24:15 எசே 19:2-14 யோனா 3:6 |
| 19 | தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போகும்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போகும். | எரே 17:26 எரே 33:13 யோசு 18:5 எசே 20:46 எசே 20:47 |
| 20 | உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? | எரே 1:14 எரே 6:22 எரே 10:22 ஆபகூ 1:6 |
| 21 | அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ? | எரே 5:31 எரே 22:23 ஏசா 10:3 எசே 28:9 |
| 22 | இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஒரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன. | உபா 7:17 உபா 8:17 உபா 18:21 ஏசா 47:8 செப் 1:12 லூக் 5:21 லூக் 5:22 |
| 23 | எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும். | எரே 2:22 எரே 2:30 எரே 5:3 எரே 6:29 எரே 6:30 எரே 17:9 நீதி 27:22 ஏசா 1:5 மத் 19:24-28 |
| 24 | ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன். | லேவி 26:33 உபா 4:27 உபா 28:64 உபா 32:26 எசே 5:2 எசே 5:12 எசே 6:8 எசே 17:21 லூக் 21:24 |
| 25 | நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | யோபு 20:29 சங் 11:6 ஏசா 17:4 மத் 24:51 |
| 26 | உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டாக எடுத்துப்போடுவேன். | எரே 13:22 புலம் 1:8 எசே 16:37 எசே 23:29 ஓசி 2:10 |
| 27 | உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார். | எரே 2:20-24 எரே 3:1 எரே 3:2 எரே 5:7 எரே 5:8 எசே 16:15-22 எசே 23:2-21 ஓசி 1:2 ஓசி 4:2 2கொரி 12:21 யாக் 4:4 |