| 1 | நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: | நெகே 2:10 நெகே 2:19 எஸ்றா 4:1-5 அப் 5:17 |
| 2 | அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான். | எஸ்றா 4:9 எஸ்றா 4:10 |
| 3 | அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான். | நெகே 2:10 நெகே 2:19 நெகே 6:1 1இரா 20:10 1இரா 20:18 2இரா 18:23 |
| 4 | எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும். | சங் 123:3 சங் 123:4 |
| 5 | அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே. | சங் 59:5-13 சங் 69:27 சங் 109:14 எரே 18:23 2தீமோ 4:14 |
| 6 | நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள். | நெகே 6:15 1நாளா 29:3 1நாளா 29:14 1நாளா 29:17 1நாளா 29:18 2நாளா 29:36 சங் 110:3 2கொரி 8:16 2கொரி 8:17 பிலிப் 2:13 எபிரெ 13:21 |
| 7 | எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி, | நெகே 4:1 நெகே 2:10 நெகே 2:19 |
| 8 | எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள். | சங் 2:1-3 சங் 83:3-11 ஏசா 8:9 ஏசா 8:10 அப் 23:12 அப் 23:13 |
| 9 | ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம். | நெகே 4:11 ஆதி 32:9-12 ஆதி 32:28-12 2இரா 19:14-19 சங் 50:15 சங் 55:16-22 லூக் 6:11 லூக் 6:12 அப் 4:24-30 |
| 10 | அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள். | எண் 13:31 எண் 32:9 சங் 11:1 சங் 11:2 ஆகா 1:2 |
| 11 | எங்கள் சத்துருக்களோவென்றால்; நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள். | நியா 20:29-48 2சாமு 17:2 சங் 56:6 ஏசா 47:11 அப் 23:12 அப் 23:21 1தெச 5:2 |
| 12 | அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள். | ஆதி 31:7 ஆதி 31:41 எண் 14:22 யோபு 19:3 |
| 13 | அப்பொழுது நான்: அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங்குடும்பமாக நிறுத்தினேன். | ஆதி 32:13-20 2நாளா 32:2-8 சங் 112:5 மத் 10:16 1கொரி 14:20 |
| 14 | அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன். | எண் 14:9 உபா 1:21 உபா 1:29 உபா 1:30 உபா 20:3 உபா 20:4 யோசு 1:9 2நாளா 20:15-17 2நாளா 32:7 சங் 27:1 சங் 46:11 ஏசா 41:10-14 மத் 10:28 எபிரெ 13:6 |
| 15 | எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம். | 2சாமு 15:31 2சாமு 17:14 யோபு 5:12 யோபு 5:13 சங் 33:10 சங் 33:11 நீதி 21:30 ஏசா 8:10 ஏசா 44:25 புலம் 3:37 புலம் 3:38 1கொரி 3:19 1கொரி 3:20 |
| 16 | அன்றுமுதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலை செய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள். | நெகே 4:23 நெகே 5:15 நெகே 5:16 சங் 101:6 |
| 17 | அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமைக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். | தானி 9:25 1கொரி 9:12 1கொரி 16:9 1கொரி 16:13 2கொரி 6:7 எபே 6:11-20 பிலிப் 1:28 2தீமோ 2:3 2தீமோ 4:7 |
| 18 | கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான். | எண் 10:9 2நாளா 13:12-17 |
| 19 | நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம். |
| 20 | நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைத் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன். | யாத் 14:14 யாத் 14:25 உபா 1:30 உபா 3:22 உபா 20:4 யோசு 23:10 சகரி 14:3 |
| 21 | இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள். | 1கொரி 15:10 1கொரி 15:58 கலா 6:9 கொலோ 1:29 |
| 22 | அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி, | நெகே 11:1 நெகே 11:2 |
| 23 | நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது. | நெகே 5:16 நெகே 7:2 நியா 9:48 1கொரி 15:10 |