| 1 | எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள். | தானி 9:3 தானி 9:4 தானி 9:20 அப் 10:30 |
| 2 | அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு. | எஸ்றா 10:26 நெகே 3:29 |
| 3 | இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக. | உபா 29:12 யோசு 9:6 2இரா 11:17 2நாளா 29:10 2நாளா 34:31 2நாளா 34:32 நெகே 9:38 நெகே 10:29-39 |
| 4 | எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான். | யோசு 7:10-26 1நாளா 22:16 1நாளா 22:19 பிரச 9:10 |
| 5 | அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள். | நீதி 1:5 நீதி 9:9 நீதி 15:23 நீதி 25:11 நீதி 25:12 நீதி 27:9 |
| 6 | அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான். | நெகே 13:5 |
| 7 | அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும், | எஸ்றா 1:1 2நாளா 30:5 |
| 8 | மூன்று நாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள். | எஸ்றா 7:26 நியா 21:5 1சாமு 11:7 |
| 9 | அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந்தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக்காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். | எஸ்றா 7:8 எஸ்றா 7:9 எஸ்தர் 2:16 |
| 10 | அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள். | எஸ்றா 9:6 எண் 32:14 யோசு 22:17 யோசு 22:18 2நாளா 28:13 மத் 23:32 |
| 11 | இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான். | லேவி 26:40-42 யோசு 7:19 சங் 32:5 நீதி 28:13 எரே 3:13 1யோவா 1:7-9 |
| 12 | அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான். | எஸ்றா 10:3 எஸ்றா 10:4 நெகே 13:23 சங் 78:37 சங் 78:57 |
| 13 | ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர். | எஸ்றா 10:18-44 மத் 7:13 மத் 7:14 |
| 14 | ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள். | உபா 17:9 உபா 17:18 உபா 17:19 2நாளா 19:5-7 |
| 15 | ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள். | நெகே 3:6 நெகே 10:20 நெகே 12:33 |
| 16 | சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து, | உபா 13:14 யோபு 29:16 யோவா 7:51 |
| 17 | அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள். |
| 18 | ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள். | எஸ்றா 9:1 லேவி 21:7 லேவி 21:13-15 1சாமு 2:22-24 நெகே 13:28 எரே 23:11 எரே 23:14 எசே 44:22 மல்கி 2:8 மல்கி 2:9 1தீமோ 3:11 |
| 19 | இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள். | 2இரா 10:15 1நாளா 29:24 2நாளா 30:8 புலம் 5:6 கலா 2:9 |
| 20 | இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும், | எஸ்றா 2:37 1நாளா 24:14 நெகே 7:40 |
| 21 | ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்; | எஸ்றா 2:39 1நாளா 24:8 நெகே 7:42 |
| 22 | பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்; | எஸ்றா 2:38 1நாளா 9:12 நெகே 7:41 |
| 23 | லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்; | எஸ்றா 8:33 நெகே 11:16 |
| 24 | பாடகரில் எலியாசியும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்; |
| 25 | மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்; | எஸ்றா 2:3 நெகே 7:8 |
| 26 | ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்வர்களும்; | எஸ்றா 10:2 எஸ்றா 2:7 எஸ்றா 2:31 எஸ்றா 8:7 நெகே 7:12 நெகே 7:34 |
| 27 | சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்; | எஸ்றா 2:8 நெகே 7:13 |
| 28 | பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்; | எஸ்றா 2:11 எஸ்றா 8:11 நெகே 7:16 |
| 29 | பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும், | எஸ்றா 2:10 நெகே 7:15 |
| 30 | பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்; | எஸ்றா 2:6 எஸ்றா 8:4 நெகே 7:11 |
| 31 | ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன், | எஸ்றா 2:32 நெகே 7:35 |
| 32 | பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்; |
| 33 | ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்; | எஸ்றா 2:19 நெகே 7:22 |
| 34 | பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல், |
| 35 | பெனாயா, பெதியா, கெல்லூ, |
| 36 | வனியா, மெரெமோத், எலெயாசீப், |
| 37 | மத்தனியா, மதனாய், யாசாய், |
| 38 | பானி, பின்னூயி, சிமெயி, |
| 39 | செலேமியா, நாத்தான், அதாயா, |
| 40 | மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, |
| 41 | அசரெயேல், செலேமியா, செமரியா, |
| 42 | சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்; |
| 43 | நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே. | எஸ்றா 2:29 நெகே 7:33 |
| 44 | இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள்; இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள். | நீதி 2:16 நீதி 5:3 நீதி 5:20 |