| 1 | அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான். | 1இரா 15:24 1இரா 22:41 1நாளா 11:10 மத் 1:8 |
| 2 | அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான். | 2நாளா 11:11 2நாளா 11:12 |
| 3 | கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து, | 2நாளா 15:2 2நாளா 15:9 ஆதி 39:2 ஆதி 39:3 ஆதி 39:21 யாத் 3:12 யாத் 4:12 யோசு 1:5 யோசு 1:9 நியா 2:18 நியா 6:12 2சாமு 5:10 1நாளா 22:18 சங் 46:7 சங் 46:11 ஏசா 8:10 ஏசா 41:10 மத் 1:23 மத் 18:20 மத் 28:20 2தீமோ 4:22 |
| 4 | தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். | லூக் 1:6 1தெச 2:12 1தெச 4:1 |
| 5 | ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது. | 2சாமு 7:25 2சாமு 7:26 1இரா 9:4 1இரா 9:5 சங் 127:1 சங் 132:12 1பேது 5:10 |
| 6 | கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான். | உபா 28:47 யோபு 22:26 |
| 7 | அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும், | உபா 4:5 சங் 34:11 சங் 51:13 பிரச 1:12 பிரச 12:9 பிரச 12:10 ஏசா 49:23 |
| 8 | இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான். | எஸ்றா 7:1-6 மல்கி 2:7 |
| 9 | இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள். | 2நாளா 35:3 நெகே 8:7 |
| 10 | யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள். | 2நாளா 14:14 ஆதி 35:5 யாத் 15:14-16 யோசு 2:9-11 |
| 11 | பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். | 2நாளா 17:5 2நாளா 9:14 2நாளா 26:8 2சாமு 8:2 2இரா 3:4 |
| 12 | இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். | 2நாளா 18:1 1நாளா 29:25 |
| 13 | யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள். | 2நாளா 26:10-15 1நாளா 27:25-31 |
| 14 | தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள். | ஆதி 12:2 ஆதி 13:16 ஆதி 15:5 |
| 15 | அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள். |
| 16 | அவனுக்கு உதவியாக கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள். | நியா 5:2 நியா 5:9 1நாளா 29:9 1நாளா 29:14 1நாளா 29:17 சங் 110:3 2கொரி 8:3-5 2கொரி 8:12-5 |
| 17 | பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். | 2நாளா 14:8 2சாமு 1:21 2சாமு 1:22 |
| 18 | அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்துஎண்பதினாயிரம்பேர் இருந்தார்கள். |
| 19 | ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள். | 2நாளா 17:2 2நாளா 17:12 2நாளா 11:12 2நாளா 11:23 |