| 1 | ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான். | 1இரா 12:21 |
| 2 | தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது: | 2நாளா 12:5 2நாளா 12:7 2நாளா 12:15 1இரா 12:22-24 |
| 3 | நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி: | ஆதி 49:28 யாத் 24:4 2இரா 17:34 பிலிப் 3:5 வெளிப் 7:4-8 |
| 4 | நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். | ஆதி 13:8 2சாமு 2:26 அப் 7:26 1கொரி 6:5-8 எபிரெ 13:1 1பேது 3:8 1யோவா 3:11-13 |
| 5 | ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான். | 2நாளா 8:2-6 2நாளா 14:6 2நாளா 14:7 2நாளா 16:6 2நாளா 17:12 2நாளா 26:6 2நாளா 27:4 ஏசா 22:8-11 |
| 6 | அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும், | ஆதி 35:19 1சாமு 17:12 மத் 2:5 மத் 2:6 |
| 7 | பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும், | யோசு 15:58 |
| 8 | காத்தும், மரேஷாவும், சீப்பும், | 1நாளா 18:1 |
| 9 | அதோராயீமும், லாகீசும், அசேக்காவும், | 2நாளா 32:9 யோசு 10:5 யோசு 10:11 யோசு 15:35 யோசு 15:39 |
| 10 | சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி, | யோசு 15:33 |
| 11 | அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும், | ஏசா 22:10 ஏசா 22:11 |
| 12 | யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான். | 2நாளா 26:14 2நாளா 26:15 2நாளா 32:5 2சாமு 13:19 2சாமு 13:22 |
| 13 | இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள். |
| 14 | லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதா தேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். | எண் 35:2-5 யோசு 21:20-42 1நாளா 6:66-81 |
| 15 | அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான். | உபா 32:17 1கொரி 10:20 1கொரி 10:21 1தீமோ 4:1 வெளிப் 16:14 |
| 16 | அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள். | 2நாளா 15:9 2நாளா 30:11 2நாளா 30:18 2நாளா 30:19 யோசு 22:19 சங் 84:5-7 |
| 17 | இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள். | 2நாளா 12:1 |
| 18 | ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான். | 1சாமு 16:6 1சாமு 17:13 1சாமு 17:28 1நாளா 2:13 1நாளா 27:18 |
| 19 | இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள். |
| 20 | அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள். | 2நாளா 11:21 2நாளா 13:2 |
| 21 | ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான். | 2நாளா 11:23 உபா 17:17 நியா 8:30 2சாமு 3:2-5 2சாமு 5:13 1இரா 11:3 1நாளா 3:1-9 உன்ன 6:8 உன்ன 6:9 |
| 22 | ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான். | உபா 21:15-17 1நாளா 5:1 1நாளா 5:2 1நாளா 29:1 |
| 23 | அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான். | 2நாளா 10:8-15 லூக் 16:8 |