| 1 | யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். | உபா 31:12 உபா 31:28 உபா 31:29 உபா 33:1-29 சங் 25:14 சங் 105:15 ஏசா 22:14 ஏசா 53:1 தானி 2:47 தானி 10:1 ஆமோ 3:7 லூக் 2:26 ரோம 1:17 ரோம 1:18 எபிரெ 10:24 எபிரெ 10:25 எபிரெ 13:1 வெளிப் 4:1 |
| 2 | யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். | சங் 34:11 நீதி 1:8 நீதி 1:9 நீதி 4:1-4 நீதி 5:1 நீதி 6:20 நீதி 7:1 நீதி 7:24 நீதி 8:32 நீதி 23:22 நீதி 23:26 |
| 3 | ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். | ஆதி 29:32 ஆதி 46:8 ஆதி 48:18 எண் 1:20 எண் 26:5 1நாளா 2:1 1நாளா 5:1 1நாளா 5:3 |
| 4 | தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. | யாக் 1:6-8 2பேது 2:14 2பேது 3:16 |
| 5 | சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். | ஆதி 29:33 ஆதி 29:34 ஆதி 34:25-31 ஆதி 46:10 ஆதி 46:11 நீதி 18:9 |
| 6 | என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. | நியா 5:21 சங் 42:5 சங் 42:11 சங் 43:5 சங் 103:1 எரே 4:19 லூக் 12:19 |
| 7 | உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன். | 2சாமு 13:15 2சாமு 13:22-28 நீதி 26:24 நீதி 26:25 நீதி 27:3 |
| 8 | யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். | ஆதி 29:35 ஆதி 44:18-34 ஆதி 46:12 உபா 33:7 1நாளா 5:2 சங் 76:1 எபிரெ 7:14 |
| 9 | யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? | ஓசி 5:4 ஓசி 5:14 1கொரி 15:24 வெளிப் 5:5 |
| 10 | சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். | எண் 24:17 சங் 60:7 எரே 30:21 ஓசி 11:12 எசே 19:11 எசே 19:14 சகரி 10:11 |
| 11 | அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான். | ஏசா 63:1-3 |
| 12 | அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும். | நீதி 23:29 |
| 13 | செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். | ஆதி 30:20 உபா 33:18 உபா 33:19 யோசு 19:10-16 |
| 14 | இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. | ஆதி 30:18 உபா 33:18 யோசு 19:17-23 நியா 5:15 நியா 10:1 1நாளா 12:32 |
| 15 | அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான். | யோசு 14:15 நியா 3:11 2சாமு 7:1 |
| 16 | தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். | ஆதி 30:6 எண் 10:25 உபா 33:22 நியா 13:2 நியா 13:24 நியா 13:25 நியா 15:20 நியா 18:1 நியா 18:2 |
| 17 | தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். | நியா 14:1-15 நியா 16:22-30 நியா 18:22-31 1நாளா 12:35 |
| 18 | கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். | சங் 14:7 சங் 25:6 சங் 40:1 சங் 62:1 சங் 62:5 சங் 85:7 சங் 119:41 சங் 119:166 சங் 119:174 சங் 123:2 சங் 130:5 ஏசா 8:17 ஏசா 25:9 ஏசா 36:8 ஏசா 30:18 ஏசா 33:2 புலம் 3:25 மீகா 7:7 மத் 1:21 மாற் 15:43 லூக் 1:30 லூக் 2:25 லூக் 2:30 லூக் 23:51 ரோம 8:19 ரோம 8:25 கலா 5:5 1தெச 1:10 |
| 19 | காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். | ஆதி 30:11 ஆதி 46:16 எண் 32:1-42 உபா 33:20 உபா 33:21 யோசு 13:8 நியா 10:1-11 1நாளா 3:18-22 1நாளா 5:11-22 1நாளா 5:26-22 |
| 20 | ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான். | ஆதி 30:13 ஆதி 46:17 உபா 33:24 உபா 33:25 யோசு 19:24-31 |
| 21 | நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். | ஆதி 30:8 ஆதி 46:24 உபா 33:23 யோசு 19:32-39 நியா 4:6 நியா 4:10 நியா 5:18 சங் 18:33 சங் 18:34 மத் 4:15 மத் 4:16 |
| 22 | யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். | ஆதி 30:22-24 ஆதி 41:52 ஆதி 46:27 ஆதி 48:1 ஆதி 48:5 ஆதி 48:16 ஆதி 48:19 ஆதி 48:20 எண் 32:1-42 உபா 33:17 யோசு 16:1-10 யோசு 17:14-17 சங் 1:1-3 சங் 128:1 சங் 128:3 எசே 19:11 |
| 23 | வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். | ஆதி 37:4 ஆதி 37:18 ஆதி 37:24 ஆதி 37:28 ஆதி 39:7-20 ஆதி 42:21 சங் 64:3 சங் 118:13 யோவா 16:33 அப் 14:22 |
| 24 | ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். | நெகே 6:9 சங் 27:14 சங் 28:8 சங் 89:1 கொலோ 1:11 2தீமோ 4:17 |
| 25 | உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். | ஆதி 28:13 ஆதி 28:21 ஆதி 35:3 ஆதி 43:23 உபா 8:17 உபா 28:12 உபா 33:1 உபா 33:13-17 |
| 26 | உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. | ஆதி 27:27-29 ஆதி 27:39-29 ஆதி 27:40-29 ஆதி 28:3 ஆதி 28:4 எபே 1:3 |
| 27 | பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். | ஆதி 35:18 ஆதி 46:21 உபா 33:12 |
| 28 | இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். | எண் 23:24 எஸ்தர் 8:7 எஸ்தர் 8:9 எஸ்தர் 8:11 எஸ்தர் 9:1-10 எசே 39:8-10 சகரி 14:1-7 |
| 29 | பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; | ரோம 12:6-21 |
| 30 | அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். | ஆதி 23:8 |
| 31 | அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். | ஆதி 23:3 ஆதி 23:16-20 ஆதி 25:9 ஆதி 35:29 ஆதி 47:30 ஆதி 50:13 அப் 7:16 |
| 32 | அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். | ஆதி 23:17-20 |
| 33 | யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக் கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். | ஆதி 49:1 ஆதி 49:24-26 யோசு 24:27-29 எபிரெ 11:22 |