| 1 | யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி; | ஆதி 45:16 ஆதி 46:31 எபிரெ 2:11 |
| 2 | தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான். | அப் 7:13 2கொரி 4:14 கொலோ 1:28 யூதா 1:24 |
| 3 | பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி, | ஆதி 46:33 ஆதி 46:34 ஆமோ 7:14 ஆமோ 7:15 யோனா 1:8 2தெச 3:10 |
| 4 | கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். | ஆதி 12:10 ஆதி 15:13 உபா 26:5 சங் 105:23 ஏசா 52:4 அப் 7:6 |
| 5 | அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே. |
| 6 | எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான். | ஆதி 47:11 ஆதி 13:9 ஆதி 20:15 ஆதி 34:10 ஆதி 45:18-20 நீதி 21:1 யோவா 17:2 |
| 7 | பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான். | ஆதி 47:10 ஆதி 35:27 யாத் 12:32 எண் 6:23 எண் 6:24 யோசு 14:13 1சாமு 2:20 2சாமு 8:10 2சாமு 19:39 1இரா 1:47 2இரா 4:29 மத் 26:26 லூக் 22:19 1பேது 2:17 |
| 8 | பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான். |
| 9 | அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான். | 1நாளா 29:15 சங் 39:12 சங் 119:19 சங் 119:54 2கொரி 5:6 எபிரெ 11:9-16 எபிரெ 13:14 1பேது 2:11 |
| 10 | பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான். | ஆதி 47:7 ஆதி 14:19 எண் 6:23-27 உபா 33:1 ரூத் 2:4 2சாமு 8:10 2சாமு 19:39 சங் 119:46 சங் 129:8 எபிரெ 7:7 |
| 11 | பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்திரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். | ஆதி 47:6 யாத் 1:11 யாத் 12:37 யோவா 10:10 யோவா 10:28 யோவா 14:2 யோவா 14:23 யோவா 17:2 யோவா 17:24 |
| 12 | யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான். | ரூத் 4:15 |
| 13 | பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்துபோயிற்று. | ஆதி 41:30 ஆதி 41:31 1இரா 18:5 எரே 14:1-6 புலம் 2:19 புலம் 2:20 புலம் 4:9 அப் 7:11 |
| 14 | யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான். | ஆதி 41:56 |
| 15 | எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள். | ஆதி 47:18 ஆதி 47:19 ஆதி 47:24 நியா 8:5 நியா 8:8 1சாமு 21:3 1சாமு 25:8 சங் 37:3 ஏசா 33:16 மத் 6:11 |
| 16 | அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான். | தானி 6:5-7 நீதி 12:17 1கொரி 10:32 பிலிப் 4:8 கொலோ 4:5 |
| 17 | அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான். | யாத் 9:3 1இரா 10:28 யோபு 2:4 ஏசா 31:1 மத் 6:24 |
| 18 | அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்துபோயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் எங்கள் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல. | 2இரா 6:26 எரே 38:9 |
| 19 | நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும் என்றார்கள். | நெகே 5:2 நெகே 5:3 யோபு 2:4 புலம் 1:11 புலம் 5:6 புலம் 5:9 மத் 16:26 பிலிப் 3:8 பிலிப் 3:9 |
| 20 | அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று. |
| 21 | மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான். | ஆதி 41:48 |
| 22 | ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம் பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை. | ஆதி 14:18 ஆதி 41:45 ஆதி 41:50 2சாமு 8:18 |
| 23 | பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள். | ஆதி 41:27 ஆதி 45:6 சங் 41:1 சங் 107:36 சங் 107:37 சங் 112:5 நீதி 11:26 நீதி 12:11 நீதி 13:23 பிரச 11:6 ஏசா 28:24 ஏசா 28:25 ஏசா 55:10 மத் 24:45 2கொரி 9:10 |
| 24 | விளைவில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நாலு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாயிருக்கட்டும் என்றான். | ஆதி 47:25 ஆதி 41:34 லேவி 27:32 1சாமு 8:15-17 சங் 41:1 சங் 112:5 |
| 25 | அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள். | ஆதி 6:19 ஆதி 41:45 ஆதி 45:6-8 ஆதி 50:20 நீதி 11:26 நீதி 11:27 |
| 26 | ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது. | ஆதி 47:22 எசே 7:24 |
| 27 | இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள். | ஆதி 8:7 ஆதி 8:9 ஆதி 13:16 ஆதி 26:4 ஆதி 28:14 ஆதி 46:3 யாத் 1:7 யாத் 1:12 உபா 10:22 உபா 26:5 நெகே 9:23 சங் 105:24 சங் 107:38 சகரி 10:8 அப் 7:17 |
| 28 | யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருஷம். | ஆதி 37:2 |
| 29 | இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் பண்ணாதிருப்பாயாக. | ஆதி 47:9 ஆதி 3:19 ஆதி 50:24 உபா 31:14 2சாமு 7:12 2சாமு 14:14 1இரா 2:1 யோபு 7:1 யோபு 14:14 யோபு 30:23 சங் 6:5 சங் 49:7 சங் 49:9 சங் 89:48 எபிரெ 9:27 |
| 30 | நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான். | ஆதி 23:19 ஆதி 25:9 ஆதி 49:29-32 ஆதி 50:5-14 ஆதி 50:25-14 2சாமு 19:37 1இரா 13:22 நெகே 2:3 நெகே 2:5 |
| 31 | அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான். | ஆதி 24:3 |