வேதாகமத்தை வாசி

Click to Subscribe

வெளிப்படுத்தல் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1பிறகு நான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு பலமுள்ள தேவதூதனைக் கண்டேன். அவனை மேகங்கள் ஆடையைப் போல சுற்றியிருந்தன. அவனது தலையைச் சுற்றி வானவில் இருந்தது. அவனது முகம் சூரினைப் போன்று இருந்தது. அவனது கால்களோ நெருப்புத் தூண்களைப் போன்று விளங்கின.
2அந்தத் தூதன் தன் கையில் சிறு தோல் சுருள் ஒன்றை வைத்திருந்தான். அத்தோல்சுருள் திறந்திருந்தது. அத்தூதன் தன் வலதுகாலைக் கடலிலும் இடது காலை பூமியிலும் வைத்தான்.
3சிங்கம் கர்ஜிப்பதைப்போன்று அத்தூதன் சத்தமிட்டான். பின் ஏழு இடிகளும் சத்தமாக முழங்கின.
4அந்த ஏழு இடிகளும் சொல்லச் சொல்ல நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் அப்போது பரலோகத் தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது ԇஏழு இடி களும் சொல்வதை நீ எழுதாதே. அவற்றை இரகசி யமாய் மூடிவைԈ என்று சொன்னது.
5கடலின் மேலும் பூமியின் மேலும் நின்று கொண்டிருந்த தேவ தூதன் தன் கையைப் பரலோ கத்துக்கு நேராக உயர்த்தியதைப் பார்த்தேன்.
6எல் லாக் காலங்களிலும் ஜீவிக்கிற தேவனின் வல்ல மையால் அத் தூதன் ஆணையிட்டான். தேவனே வானத்தையும் அதில் உள்ளவற்றையும் படைத்த வர். அவரே பூமியையும் அதில் உள்ள அனைத்தை யும் படைத்தவர். அவரே கடலையும் அதில் உள் ளவற்றையும் படைத்தவர். அந்தத் தூதன், ԇஇனி தாமதம் இருக்காதுԈ
7ஏழாம் தூதன் எக்காளத்தை ஊதத் தயாராக இருக்கும் நாட்களில் தேவனு டைய இரகசியத் திட்டம் நிறைவேறும். தேவன் தன் ஊழியக்காரரிடமும், தீர்க்கதரிசிகளிடமும் கூறிய நற்செய்தி தான் அத்திட்டம்Ԉ என்றான்.
8மீண்டும் அதே குரலை நான் பரலோகத்திலி ருந்து கேட்டேன். அக்குரல் என்னிடம், ԇபோ, அத்தூதன் கையில் உள்ள திறந்திருக்கும் தோல் சுருளை வாங்கிக் கொள். கடலிலும், பூமியிலும் நிற்கிற தூதனே இவன்Ԉ என்றது.
9எனவே, நான் அத்தூதனிடம் சென்று அச்சிறு தோல்சுருளைத் தருமாறு கேட்டேன். அத்தூதன் என்னிடம் ԇஇத்தோல் சுருளை எடுத்துத் தின்று விடு. இது உன் வயிற்றில் கசப்பாக இருக்கும் ஆனால் உன் வாயில் இது தேனைப் போன்று இனிக்கும்Ԉ, என்றான்.
10அதனால் தூதனின் கையில் இருந்து அச்சிறு தோல் சுருளை நான் வாங்கினேன். அதனை நான் தின்றேன். அது என் வாயில் தேனைப் போன்று இனித்தது. ஆனால் அது என் வயிற்றுக் குப் போனதும் கசந்தது.
11அப்போது அவன் என் னிடம் ԇநீ மறுபடியும் பல்வேறு இனங்கள், நாடுகள், மொழிகள், அரசர்கள் ஆகியோரைப் பற்றித் தீர்க்க தரிசனம் சொல்ல வேண்டும்Ԉ என்றான்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.