| 1 | கடந்த காலத்தில் தேவன், தீர்க்கதரிசிகள் மூலம் நமது மக்களிடம் பேசியிருக்கிறார். அவர், பல வேறுபட்ட வழிகளிலும் பல சமயங்களிலும் பேசினார். |
| 2 | இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். |
| 3 | அந்தக் குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார். அவர் தனது வலிமைமிக்க கட்டளைகளினால் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார். குமாரனானவர் மக்களைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தினார். பிறகு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் பரலோகத்தில் அமர்ந்தார். |
| 4 | அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார். |
| 5 | கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை, ԇநீர் எனது குமாரன், இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.Ԉ சங்கீதம் 2:7 அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை, ԇநான் அவரது பிதாவாக இருப்பேன். அவர் எனது குமாரனாக இருப்பார்.Ԉ2 சாமுவேல் 7:14 |
| 6 | மேலும் தனது முதற்பேறான குமாரனை பூமிக்கு அனுப்புகிறபோது, ԇதேவதூதர்கள் எல்லோரும் அந்தக் குமாரனைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்Ԉ உபாகமம் 32:43 என்று கூறினார். |
| 7 | தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது, ԇதேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்Ԉ சங்கீதம் 104:4 எனக் குறிப்பிடுகிறார். |
| 8 | ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது, ԇதேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது. சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர். |
| 9 | நீர் நீதியை விரும்புகிறீர். அநீதியை வெறுக்கின்றீர். ஆகையால் தேவனே, உமது தேவன் உம்மோடு இருப்பவர்களுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியை உமக்குத் தந்திருக்கிறார்.Ԉ சங்கீதம் 45:6-7 |
| 10 | மேலும் தேவன், ԇகர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர். மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன. |
| 11 | இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர். ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும். |
| 12 | நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர். அவை ஓர் ஆடையைப் போன்றுமாறும். ஆனால் நீரோ மாறவேமாட்டீர். உமது ஜீவன் ஒருபோதும் அழியாதுԈ என்றும் கூறுகிறார். சங்கீதம் 102:25-27 |
| 13 | தேவன் எந்த தேவ தூதனிடமும், ԇஉமது பகைவர்களை உம்முடைய அதிகாரத்துக்குக் கீழ்க்கொண்டு வரும்வரை எனது வலது பக்கத்தில் உட்காரும்Ԉ என்று என்றைக்கும் சொன்னதில்லை. சங்கீதம் 110:1 |
| 14 | தேவதூதர்கள் எல்லாரும், தேவனுக்கு சேவை செய்துகொண்டிருக்கிற ஆவிகள் ஆவார்கள். இரட்சிப்பைப் பெறப் போகிறவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். |