வேதாகமத்தை வாசி

Click to Subscribe

அப்போஸ்தலர் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக் களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான்.
2ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன்.
3யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது)
4ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியு மட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான்.
5எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
6இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கி லிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிக மான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக் கொண்டி ருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.
7அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவதூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன் ԇவிரைந்து எழு!Ԉ என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன.
8தேவதூதன் பேது ருவை நோக்கி, ԇஆடைகளை உடுத்து, செருப்பு களை அணிந்துகொள்Ԉ என்றான். அவ்வாறே பேது ருவும் செய்தான். பின் தேவ தூதன் ԇஅங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வாԈ என் றான்.
9தேவதூதன் வெளியே சென்றான். பேதுரு வும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண் மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான்.
10பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந் தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானா கவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான்.
11நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப் போது உணர்ந்தான். அவன், ԇகர்த்தர் உண்மையா கவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலி ருந்து என்னைக் காத்தார்Ԉ என்று எண்ணினான்.
12பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியா ளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட் டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர் கள் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டி ருந்தனர்.
13பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள்.
14ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், ԇபேதுரு கதவருகே நிற்கிறார்!Ԉ என்றாள்.
15விசுவாசிகள் ரோதையை நோக்கி, ԇநீ ஒரு பைத்தியம்!Ԉ என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், ԇஅது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்Ԉ என்றனர்.
16ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக் கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
17அவர்களை அமைதியாக இருக்கும்படியாகப் பேதுரு தனது கையால் சைகை செய்தான். தேவன் அவனைச் சிறையினின்று எவ்வாறு விடுவித்தார் என்பதை அவன் அவர்களுக்கு விவரித்தான். அவன், ԇநடந்ததை யாக்கோபுக்கும் பிற சகோதரருக்கும் சொல்லுங்கள்Ԉ என்றான். பின் வேறிடத்திற்குப் போவதற்காக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான்.
18மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர்.
19ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான். பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான்.
20தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
21ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்து கொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான்.
22மக்கள் உரக்க, ԇஇது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!Ԉ என்றனர்.
23ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக் கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.
24தேவனுடைய செய்தி பரவிக் கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருந்தது.
25எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.