| 1 | லாசரு என்ற பெயருள்ள ஒரு மனிதன் நோயுற்றிருந்தான். அவன் பெத்தானியா என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தான். இந்நகரத்தில் தான் மரியாளும் அவளது சகோதரி மார்த்தாளும் வாழ்ந்தனர். |
| 2 | (இந்த மரியாள்தான் பின்பு இயேசுவிற்கு வாசனைத் தைலம் பூசித் தன் கூந்தலால் அவரது கால்களைத் துடைத்தவள்) மரியாளின் சகோதரன்தான் லாசரு. அவன் இப்போது நோயுற்றிருந்தான். |
| 3 | ஆகையால் மரியாளும் மார்த்தாளும் இயேசுவிடம் செய்தி அனுப்பி ԇஆண்டவரே, உங்கள் அன்பான நண்பன் லாசரு நோயுற்றிருக்கிறான்Ԉ என்று சொன்னார்கள். |
| 4 | இயேசு இதனைக் கேட்டு ԇநோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது. இது, தேவனின் குமாரனுக்குப் புகழைக் கொண்டு வருவதற்காகவே உண்டானதுԈ என்றார். |
| 5 | (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந் தார்) |
| 6 | இயேசு லாசருவின் நோயைப் பற்றி அறிந்த போது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார். |
| 7 | பிறகு இயேசு தன் சீஷர்களிடம் ԇநாம் மறுபடியும் யூதேயாவுக் குத் திரும்பிப் போவோம்Ԉ என்றார். |
| 8 | அவரது சீஷர்கள், ԇஆண்டவரே, யூதேயாவில் உள்ள யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தார்கள். அது நடந்தது சமீபகாலத்தில் தான். எனவே, இப்பொழுது அங்கே திரும்பிப் போக வேண்டுமா?Ԉ என்று கேட்டனர். |
| 9 | இயேசுவோ, ԇபகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கும். சரிதானே. ஒருவன் பகலில் நடந்தால், அவன் தடுமாறி விழமாட்டான். ஏனென்றால், அவனால் உலகின் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். |
| 10 | ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லைԈ என்றார். |
| 11 | அவர் மேலும், ԇநமது நண்பன் லாசரு இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்Ԉ என்றார். |
| 12 | அவரது சீஷர்களோ, ԇஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்Ԉ என்றார்கள். |
| 13 | லாசரு இறந்து போனான் என்பதைக் குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக் கொண்டனர். |
| 14 | பிறகு இயேசு தெளிவாக, ԇலாசரு இறந்து போனான். |
| 15 | அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால் தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்Ԉ என்றார். |
| 16 | பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, ԇநாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்Ԉ என்றான். |
| 17 | இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். |
| 18 | எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. |
| 19 | யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர். |
| 20 | இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக் கொண்டாள். |
| 21 | மார்த்தாள் இயேசுவிடம், ԇஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். |
| 22 | ஆனால் இப்பொழுது கூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்Ԉ என்றாள். |
| 23 | இயேசுவோ, ԇஉன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்Ԉ என்றார். |
| 24 | மார்த்தாளோ, ԇஉயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்Ԉ என்றாள். |
| 25 | இயேசு அவளிடம், ԇநானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். |
| 26 | என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?Ԉ எனக் கேட்டார். |
| 27 | ԇஆம், ஆண்டவரே. நீர் தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர் தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்Ԉ என்றாள் மார்த் தாள். |
| 28 | மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். ԇஇயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்Ԉ என்றாள் மார்த்தாள். |
| 29 | இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள். |
| 30 | இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார். |
| 31 | யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக் கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர். |
| 32 | இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். ԇஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்து போயிருக்கமாட்டான்Ԉ என்று சொன்னாள். |
| 33 | மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார். |
| 34 | ԇஅவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?Ԉ என்று அவளிடம் கேட்டார். அவர்கள் அவரிடம், ԇகர்த்தரே, வந்து பாரும்Ԉ என்றனர். |
| 35 | இயேசு அழுதார். |
| 36 | இதைக் கண்ட யூதர்கள், ԇபாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்Ԉ என்றனர். |
| 37 | ஆனால் சில யூதர்களோ, ԇஇயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?Ԉ என்று கேட்டனர். |
| 38 | மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது. |
| 39 | இயேசு, ԇஅந்தப் பாறையை அகற்றுங்கள்Ԉ என்றார். மார்த்தாளோ, ԇஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமேԈ என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி. |
| 40 | இயேசு மார்த்தாளிடம், ԇநான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்Ԉ என்றார். |
| 41 | ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து ԇபிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன். |
| 42 | எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர் தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறேன்Ԉ என்றார். |
| 43 | இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், ԇலாசருவே, வெளியே வாԈ என்று அழைத்தார். |
| 44 | இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது. இயேசு மக்களிடம், ԇதுணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்Ԉ என்றார். |
| 45 | மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். |
| 46 | ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள். |
| 47 | பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். ԇஇனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். |
| 48 | அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக் கொள்வார்கள்Ԉ என்று பேசிக்கொண்டனர். |
| 49 | அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் ԇஉங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. |
| 50 | நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?Ԉ என்று சொன்னான். |
| 51 | காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். |
| 52 | ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார். |
| 53 | அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். |
| 54 | ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார். |
| 55 | யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக் கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். |
| 56 | மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு ԇஇயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?Ԉ என ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டனர். |
| 57 | ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைது செய்ய முடியும். |