| 1 | பஸ்கா எனப்படும், யூதர்களின் புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குரிய காலம் நெருங்கி வந்தது. |
| 2 | தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவைக் கொல்வதற்கு வழி தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்கு பயந்தனர். |
| 3 | இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் யூதாஸ் காரியோத்து என்பவன் ஆவான். சாத்தான் யூதாஸிற்குள் புகுந்து ஒரு தீய செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டினான். |
| 4 | யூதாஸ் தலைமை ஆசாரியரிடமும், தேவாலயத்தைப் பாதுகாத்த வீரர்களிடமும் சென்று பேசினான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதைக் குறித்து அவன் அவர்களிடம் பேசினான். |
| 5 | அவர்கள் இதனால் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தால் அவனுக்குப் பணம் கொடுப்பதாக அவர்கள் கூறினார்கள். |
| 6 | யூதாஸ் அதற்கு ஒப்புக்கொண்டான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்ற நேரத்தை எதிர்பார்த்திருந்தான் யூதாஸ். தன்னைச் சுற்றி லும் மக்கள் எவரும் பார்க்காத நேரத்தில் அதைச் செய்யவேண்டுமென யூதாஸ் விரும்பினான். |
| 7 | புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாள் அது ஆகும். |
| 8 | பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, ԇநாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்Ԉ என்றார். |
| 9 | பேதுருவும், யோவானும், இயேசுவிடம், ԇபஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?Ԉ என்று கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி, |
| 10 | ԇகவனியுங்கள், நீங்கள் எருசலேமுக்குள் சென்ற பின்பு ஒரு குடத்தில் தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனைக் காண்பீர்கள். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குள் செல்வான். அவனோடு நீங்கள் செல்லுங்கள். |
| 11 | அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்Ԇ என்று சொல்லுங்கள். |
| 12 | உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்Ԉ என்றார். |
| 13 | எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள். |
| 14 | பஸ்கா விருந்தை அவர்கள் சாப்பிடும் நேரம் வந்தது. இயேசுவும், சீஷர்களும் மேசையைச் சூழ்ந்து அமர்ந்தனர். |
| 15 | அவர்களிடம் இயேசு, ԇநான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ண வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். |
| 16 | தேவனின் இராஜ்யத்தில் அதற்குரிய உண்மையான பொருள் கொடுக்கப்படும்வரைக்கும் நான் இன்னொரு பஸ்கா விருந்தைப் புசிக்கமாட்டேன்Ԉ என்றார். |
| 17 | பின்பு இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்பு அவர், ԇஇக்கோப்பையை எடுத்து இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். |
| 18 | ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும் வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லைԈ என்றார். |
| 19 | பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப்பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, ԇஇதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்Ԉ என்றார். |
| 20 | அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக்கோப்பையை எடுத்து ԇஇந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறதுԈ என்றார். |
| 21 | இயேசு, ԇஉங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான். மேசை மீது அவனது கை என் கைக்குப் பக்கத்தில் இருக்கிறது. |
| 22 | தேவன் திட்டமிட்டபடியே மனிதகுமாரன் செய்வார். ஆனால் மனிதகுமாரனைக் கொல்லப்படுவதற்காக ஒப்படைக்கிற மனிதனுக்கு மிகவும் தீமை நடக்கும்Ԉ என்றார். |
| 23 | அப்போது சீஷர்கள் ஒருவருக்கொருவர், ԇஇயேசுவுக்கு அவ்வாறு செய்பவன் நமக்குள் யார்?Ԉ என்று கேட்டார்கள். |
| 24 | பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். |
| 25 | ஆனால் இயேசு அவர்களை நோக்கி, ԇஉலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் அரசர்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ԅமக்களின் உதவியாளன்Ԇ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள். |
| 26 | ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப் போன்று நடந்து கொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப் போல இருக்க வேண்டும். |
| 27 | யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா? மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் நான் ஒரு வேலைக்காரனைப் போல இருக்கிறேன். |
| 28 | ԇபெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக் கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். |
| 29 | எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத் திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். |
| 30 | என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு குலங்களையும் நியாயம்தீர்ப்பீர்கள். |
| 31 | ԇஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), |
| 32 | நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்Ԉ என்றார். |
| 33 | ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, ԇஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்Ԉ என்றான். |
| 34 | ஆனால் இயேசு, ԇபேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்Ԉ என்றார். |
| 35 | பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, ԇமக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?Ԉ என்று கேட்டார். சீஷர்கள், ԇஇல்லைԈ என்றார்கள். |
| 36 | இயேசு அவர்களை நோக்கி, ԇஆனால், இப் போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள். |
| 37 | வேதவாக்கியம் சொல்கிறது, ԇமக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.Ԉ ஏசாயா 53:12 இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறதுԈ என்றார். |
| 38 | சீஷர்கள், ԇஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளனԈ என்றார்கள். இயேசு அவர்களிடம், ԇஇரண்டு போதுமானவைԈ என்றார். |
| 39 | இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். |
| 40 | அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார். |
| 41 | பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: |
| 42 | ԇபிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்Ԉ என்றார். |
| 43 | அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான். |
| 44 | வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவது போல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது. |
| 45 | இயேசு பிரார்த்தனை செய்து முடிந்த பின்னர், அவரது சீஷர்களிடம் சென்றார். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். (அவர்கள் துயரம் அவர்களைச் சோர்வுறச் செய்தது.) |
| 46 | இயேசு அவர்களை நோக்கி, ԇஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்Ԉ என்றார். |
| 47 | இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான். |
| 48 | ஆனால் இயேசு அவனை நோக்கி, ԇயூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும் பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?Ԉ என்று கேட்டார். |
| 49 | இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், ԇஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?Ԉ என்றார்கள். |
| 50 | சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான். |
| 51 | இயேசு ԇநிறுத்துԈ என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார். |
| 52 | இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, ԇவாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? |
| 53 | ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை.? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்Ԉ என்றார். யோ. 18:12-18, 25-27) |
| 54 | அவர்கள் இயேசுவைச் சிறை பிடித்துக் கொண்டு போனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டு வந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. |
| 55 | வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட் கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். |
| 56 | ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட் கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், ԇஇந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்Ԉ என்றாள். |
| 57 | ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், ԇபெண்ணே, எனக்கு அவரைத் தெரியாதுԈ என்றான். |
| 58 | சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, ԇஇயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன் ԇஎன்றான். ஆனால் பேதுரு ԇமனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்லԈ என்றான். |
| 59 | ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், ԇஇது உண்மை, இந்த மனி தன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்Ԉ என்றான். ԇஎனக்கு நிச்சமாகத் தெரியும்Ԉ என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத் தினான். |
| 60 | ஆனால் பேதுரு, ԇமனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக் குறித்து எனக்குத் தெரியாதுԈ என்றான். பேதுரு இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. |
| 61 | அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். ԇசேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்Ԉ என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவு கூர்ந்தான். |
| 62 | பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான். |
| 63 | சில மனிதர்கள் இயேசுவைக் காவல்புரிந்துகொண்டிருந்தார்கள். |
| 64 | அவர்கள் இயேசுவைப் பலவாறு கேலிசெய்தார்கள். அவர் பார்க்க முடியாதபடி அவரது கண்களை மறைத்தார்கள். பின்பு அவரை அடித்து விட்டு “நீ தீர்க்கதரிசியானால் யார் உன்னை அடித்தார்கள் என்று கூறு” என்றார்கள். |
| 65 | அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள். |
| 66 | மறுநாள் காலையில், மக்களின் முதிய அதிகாரிகள், தலைமை ஆசாரியர், வேதபாரகர் ஆகியோர் ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் தம் உயர்ந்த நீதிமன்றத்துக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள். |
| 67 | அவர்கள், ԇநீ கிறிஸ்துவானால் அப்படியே எங்களுக்குச் சொல்Ԉ என்றார்கள். இயேசு அவர்களுக்கு, ԇநான் கிறிஸ்து என்று உங்களுக்குக் கூறினால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். |
| 68 | நான் உங்களைக் கேட்டால் நீங்கள் பதில் தரமாட்டீர்கள். |
| 69 | ஆனால் இப்பொழுதிலிருந்து தேவனுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் மனித குமாரன் உட்கார்ந்திருப்பார்Ԉ என்றார். |
| 70 | அவர்கள் எல்லாரும், ԇஅப்படியானால் நீ தேவனுடைய குமாரனா?Ԉ என்றார்கள். இயேசு அவர்களுக்கு ԇஆம், நான் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் சொல்வது சரியேԈ என்றார். |
| 71 | அவர்கள், ஏன் நமக்கு இப்போது சாட்சிகள் தேவை? அவன் இவ்வாறு சொல்வதை நாமே கேட்டோமே!Ԉ என்றனர். |