வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 12

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்போது நீ கூறுவாய், “கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன் நீர் என் மீது கோபமாக இருந்தீர். ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்! என் மீது உமது அன்பைக் காட்டும்”.
2என்னைத் தேவன் காப்பாற்றுகிறார். நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை. அவர் என்னைக் காப்பாற்றுகிறார். கர்த்தராகிய யேகோவா எனது பெலம். அவர் என்னைக் காப்பாற்றுகிறார். நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன்.
3உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள். பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய்.
4பிறகு நீ கூறுவாய்: “கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்! அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!”
5கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்! ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார். உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள். எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள்.
6சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.