வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 61

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். என் ஜெபத்தைக் கேளும்.
2நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
3நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
4நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர். உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
6அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும். அவர் என்றென்றும் வாழட்டும்!
7அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்! உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
8நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன். நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.