| 1 | தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். என் பாவங்களை அழித்துவிடும். |
| 2 | தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்! |
| 3 | நான் பாவம் செய்தேனென அறிவேன். அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன். |
| 4 | நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் தவறு செய்தவன் என் பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக் கையிடுகிறேன். உமது முடிவுகள் நியாயமா னைவை. |
| 5 | நான் பாவத்தில் பிறந்தேன். என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள். |
| 6 | தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால் உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும். |
| 7 | ஈசோப் செடியால் என்னைத் தூய்மையாக்கும். பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்! |
| 8 | என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சி யாக இருக்கும் வகையைக் கூறும். நீர் நொறுக் கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடை யட்டும். |
| 9 | எனது பாவங்களைப் பாராதேயும்! அவற்றை யெல்லாம் நீக்கிவிடும் |
| 10 | தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத் தைச் சிருஷ்டியும்! எனது ஆவியை மீண்டும் பலமாக்கும். |
| 11 | என்னைத் தூரத் தள்ளாதேயும்! என்னிடமி ருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடா தேயும்! |
| 12 | உமது உதவி என்னை மகிழ்விக்கிறது! மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும். எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப் படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும். |
| 13 | நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக் குப் போதிப்பேன், அவர்கள் உம்மிடம் திரும்பு வார்கள். |
| 14 | தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக் காதேயும். என் தேவனே, நீரே எனது மீட்பர். நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும். |
| 15 | என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்! |
| 16 | நீர் பலிகளை விரும்பவில்லை. நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை! |
| 17 | தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருத யத்தோடு உம்மிடம்வருபவரை நீர் தள்ளிவிட மாட்டீர். |
| 18 | தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்க முடையவராகவும் இரும். எருசலேமின் சுவர் களை எழுப்பும். |
| 19 | அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும். ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள். |