வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 43

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். அவன் வஞ்சகன், பொய்யன். தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
2தேவனே, நீர் என் பாதுகாப்பிடம். ஏன் என்னைக் கைவிட்டீர்? பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை?
3தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக. உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும். உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
4நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன். என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.
5ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்? ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்? நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும். அவர் என்னை மீட்பார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.