வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 15

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்? உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
2தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
3அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான். அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான். அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
4தேவனை வெறுப்போரை அவன் மதியான். ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான். அவன் அயலானுக்கு வாக்களித்தால் அவற்றைச் சரியாகக் கடைப் பிடிப்பான்.
5அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான். குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான். அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.