| 1 | அப்போது தேமானின் எலிப்பாஸ் பதிலாக, |
| 2 | “தேவனுக்கு நமது உதவி தேவையா? இல்லை! மிகுந்த ஞானவானும் உண்மையாகவே தேவனுக்குப் பயன்படுவதில்லை. |
| 3 | நீ தக்க நெறியில் வாழ்ந்தது தேவனுக்கு உதவுமா? இல்லை! நீ தேவனைப் பின்பற்றுவதால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஏதேனும் கிடைக்குமா? இல்லை! |
| 4 | “யோபுவே, ஏன் தேவன் உன்னைத் தண்டித்து, உன்னில் குறை காண்கிறார். நீ அவரை தொழுது கொள்வதாலா? |
| 5 | இல்லை! நீ மிகுதியாகப் பாவம் செய்திருப்ப தால்தான். யோபுவே, நீ பாவம் செய்வதை நிறுத்துவதில்லை! |
| 6 | நீ உன் சகோதரன் ஒருவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்து, அவன் உனக்குத் திருப்பித் தருவதற்கு அடையாளமாக எதையேனும் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாம். நீ கடனுக்கு ஈடாக ஏதேனும் ஏழை மனிதனின் ஆடைகளை எடுத்திருக்கலாம். இல்லையெனில், எக்காரணமுமின்றி அவ்வாறு செய்திருக்கலாம். |
| 7 | சோர்ந்த, பசித்த ஜனங்களுக்கு நீ தண்ணீரும், உணவும் கொடாது இருந்திருக்கலாம். |
| 8 | யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு, ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள். |
| 9 | விதவைகளுக்கு எதுவும் கொடாது அவர்களை நீ துரத்தியிருக்கலாம். யோபுவே, நீ அநாதைகளை ஏமாற்றியிருக்கலாம். |
| 10 | ஆகவே, உன்னைச் சுற்றிலும் கண்ணிகள் அமைந்துள்ளன, திடீர்பயம் உன்னை அஞ்சவைக்கிறது. |
| 11 | ஆகவே, நீ பார்க்க முடியாதபடி மிகுந்த இருள் சூழ்ந்திருக்கிறது, வெள்ளப்பெருக்கு உன்னை மூடுகிறது. |
| 12 | “தேவன் பரலேகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வாழ்கிறார். விண்மீன்கள் எத்தனை உயரத்தில் உள்ளன எனப்பாருங்கள். மிக உயர்ந்த நட்சத்திரத்தை தேவன் கிழே நோக்கிப்பார்க்கிறார். |
| 13 | ஆனால் யோபுவே, நீ சொல்லலாம் ‘தேவன் என்ன அறிவார்? இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து, தேவன் நம்மை நியாயந்தீர்க்கக் கூடுமா? |
| 14 | அடர்த்தியான மேகங்கள் அவரை நம்மிடமிருந்து மறைக்கின்றன, எனவே, அவர் வானத்தின் விளிம்பைத் தாண்டி நடக்கிறபோது நம்மைப் பார்க்க முடிவதில்லை’ எனக் கூறுவாய். |
| 15 | “யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில் நீ நடந்துக்கொண்டிருக்கிறாய். |
| 16 | அவர்கள் இறக்கவேண்டிய காலத்திற்கு முன்னரே, அத்தீயோர் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள். |
| 17 | அவர்கள் தேவனைப் பார்த்து, ‘எங்களைத் தனித்து விட்டுவிடும்! சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களை என்னச் செய்யமுடியும்!’ என்பார்கள். |
| 18 | நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே! இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது. |
| 19 | அழிவதை நல்லோர் காண்பார்கள். அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள். களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள், |
| 20 | “உண்மையாகவே நம் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். நெருப்பு அவர்களின் செல்வத்தைத் கொளுத்துகிறது!’ |
| 21 | “இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள். இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும். |
| 22 | அவரது போதனையை ஏற்றுக்கொள். அவர் சொல்வதைக் கவனமாகக் கேள். |
| 23 | யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய். ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும். |
| 24 | உனது பொன்னை நீ தூசியாகக் கருத வேண்டும். பள்ளத்தாக்கின் பாறைகளைப் போல, உனது உயர்ந்த பொன்னைக் கருதவேண்டும். |
| 25 | சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும். அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும். |
| 26 | அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய். அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய். |
| 27 | நீ அவரிடம் ஜெபிப்பாய். அவர் உன்னைக் கேட்பார். நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும். |
| 28 | நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும், உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். |
| 29 | பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார். ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார். |
| 30 | அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும். நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார். ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான். |