| 1 | அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள். |
| 2 | செருபாபேலோடு திரும்பிய ஜனங்களின் விபரம்: யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா. இஸ்ரவேலில் இருந்துதிரும்பிய ஜனங்களின் பெயர்களும் எண்ணிக்கையும் கீழ்வருமாறு: |
| 3 | பாரோஷின் சந்ததியினர் 2,172 |
| 4 | செபத்தியாவின் சந்ததியினர் 372 |
| 5 | ஆராகின் சந்ததியினர்775 |
| 6 | யெசுவா மற்றும் யோவாபின் குடும்பத்திலிருந்து பாகாத் மோவாபின் சந்ததியினர் 2,812 |
| 7 | ஏலாமின் சந்ததியினர் 1,254 |
| 8 | சத்தூவின் சந்ததியினர்945 |
| 9 | சக்காயின் சந்ததியினர் 760 |
| 10 | பானியின் சந்ததியினர் 642 |
| 11 | பெபாயின் சந்ததியினர் 623 |
| 12 | அஸ்காதின் சந்ததியினர் 1,222 |
| 13 | அதொனிகாமின் சந்ததியினர் 666 |
| 14 | பிக்வாயின் சந்ததியினர் 2,056 |
| 15 | ஆதீனின் சந்ததியினர் 454 |
| 16 | எசேக்கியாவின் குடும்பம் வரைக்கும் அதேரின் சந்ததியினர் 98 |
| 17 | பேசாயின் சந்ததியினர் 323 |
| 18 | யோராகின் சந்ததியினர் 112 |
| 19 | ஆசூமின் சந்ததியினர் 223 |
| 20 | கிபாரின் சந்ததியினர் 95 |
| 21 | பெத்லகேமின் ஊரிலிருந்து123 |
| 22 | நெத்தோபாவின் ஊரிலிருந்து 56 |
| 23 | ஆனதோத்தின் ஊரிலிருந்து 128 |
| 24 | அஸ்மாவேத்தின் ஊரிலிருந்து 42 |
| 25 | கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஆகியோர் ஊரிலிருந்து 743 |
| 26 | ராமா, காபா ஆகியோரின் ஊரிலிருந்து 621 |
| 27 | மிக்மாசின் ஊரிலிருந்து 122 |
| 28 | பெத்தேல், ஆயி ஊரிலிருந்து 223 |
| 29 | நேபோவின் ஊரிலிருந்து 52 |
| 30 | மக்பீஷின் ஊரிலிருந்து 156 |
| 31 | ஏலாமின் ஊரிலிருந்து 1,254 |
| 32 | ஆரீமின் ஊரிலிருந்து 320 |
| 33 | லோத், ஆதீத், ஓனோ ஊரிலிருந்து725 |
| 34 | எரிகோவின் ஊரிலிருந்து 345 |
| 35 | சேனாகின் ஊரிலிருந்து 3,630 |
| 36 | பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின் சந்ததியினர் 973 |
| 37 | இம்மேரின் சந்ததியினர் 1,052 |
| 38 | பஸ்கூரின் சந்ததியினர் 1,247 |
| 39 | ஆரீமின் சந்ததியினர் 1,017 |
| 40 | கீழே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்: ஒதாயாவின் குடும்பம் முடிய யெசுவா மற்றும் கத்மியேல் சந்ததியினர் 74 |
| 41 | பாடகர்கள்: ஆசாபின் சந்ததியினர் 128 |
| 42 | கீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா சோபா சந்ததியினர்139 |
| 43 | ஆலயச் சிறப்பு பணியாளர்களின் சந்ததியினர்: சீகா, அசுபா, தபாகோத், |
| 44 | கேரோஸ், சீயாகா, பாதோன், |
| 45 | லெபானாக், அகாபா, அக்கூப், |
| 46 | ஆகாப், சல்மாய், ஆனான், |
| 47 | கித்தேல், காகார், ராயாக், |
| 48 | ரேத்சீன், நெகோதா, காசாம், |
| 49 | ஊசா, பாசெயா, பேசாய், |
| 50 | அஸ்னா, மெயூனீம், நெபுசீம், |
| 51 | பக்பூக், அகுபா, அர்கூர், |
| 52 | பஸ்லூத், மெகிதா, அர்ஷா, |
| 53 | பர்கோஸ், சிசெரா, தாமா, |
| 54 | நெத்சியா, அதிபா. |
| 55 | சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்: சோதாய், சொபெரேத், பெருதா, |
| 56 | யாலாக், தர்கோன், கித்தேல், |
| 57 | செபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி. |
| 58 | ஆலயப் பணியாட்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் மொத்தம் 392 |
| 59 | எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை. |
| 60 | தெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர் 652 |
| 61 | ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.) |
| 62 | இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை. |
| 63 | இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை. |
| 64 | ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. |
| 65 | அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர். |
| 66 | அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், |
| 67 | 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன. |
| 68 | இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள். |
| 69 | ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள். |
| 70 | எனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள். |