| 1 | பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா பென்யமீனின் மூத்த மகன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது மகன். அகராக் பென்யமீனின் மூன்றாவது மகன். |
| 2 | நோகா, பென்யமீனின் நான்காவது மகன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது மகன். |
| 3 | ஆதார், கேரா, அபியூத், |
| 4 | அபிசுவா, நாமான், அகோவா, |
| 5 | கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் மகன்கள். |
| 6 | இவர்கள் ஏகூதின் சந்ததியினர். கேபாவின் குடும்பங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இவர்கள், தம் வீடுகளை விட்டு விட்டு மனாகாத்துக்குப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாமான், அகியா, கேரா ஆகியோர் ஏகூதின் சந்ததியினர். |
| 7 | கேரா இவர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு அழைத்துச்சென்றான். ஊசா, அகியூத் ஆகியோர் தந்தையானான் கேரா. |
| 8 | மோவாப்பில் சகாராயீம் தன் மனைவிகளான ஊசிம், பாராள் ஆகியோரை விவாகரத்து செய்தான். பின்னர் பிற மனைவியோடு சில பிள்ளைகளைப் பெற்றான். |
| 9 | சகாராயீம் தன் மனைவியான ஓதேசாலிடம் யோவாப், சீபியா, மேசா, மல்காம், |
| 10 | எயூஸ், சாகியா, மிர்மா, ஆகிய பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் சகாராயீமின் மகன்கள். |
| 11 | சகாராயிமுக்கும் ஊசீமுக்கும் இரண்டு மகன்கள். அவர்களின் பெயர் அபிதூப், எல்பால். |
| 12 | எல்பாலின் மகன்களாக ஏபேர், மீஷாம், சாமேத், பெரீயா, சேமா ஆகியோர் பிறந்தனர். சாமேத் ஓனா, லோத் ஆகிய நகரங்களையும், லோத்தைச் சுற்றிலும் சிறிய ஊர்களையும் உருவாக்கினான். |
| 13 | பெரீயாவும், சேமாவும் ஆயயோன் ஜனங்களின் தலைவர்களாயிருந்தனர். இவர்கள் காத்தியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். |
| 14 | பெரீயாவின் மகன்களாக சாஷாக், ஏரே மோத் |
| 15 | செபதியா, ஆராத், ஆதேர், |
| 16 | மிகாயேல், இஸ்பா, யோகா ஆகியோர் பிறந்தனர். |
| 17 | எல்பாலின் மகன்களாக செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ரபேர், |
| 18 | இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் பிறந்தனர். |
| 19 | சிமேயின் மகன்களாக யாக்கீம், சிக்ரி, சப்தி, |
| 20 | எலியேனாய், சில்தாய், எலியேல், |
| 21 | அதாயா, பெராயா, சிம்ராத், ஆகியோர் பிறந்தனர். |
| 22 | சாஷாக்கின் மகன்களாக இஸ்பான், ஏபேர், ஏலியேல், |
| 23 | அப்தோன், சிக்ரி, ஆனான், |
| 24 | அனனியா, ஏலாம், அந்தோதியா, |
| 25 | இபிதியா, பெனூயேல் ஆகியோர் பிறந்தனர். |
| 26 | எரொகோமின் மகன்களாகச் சம்சேராய், செகரியா, அத்தாலியா, |
| 27 | யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் பிறந்தனர். |
| 28 | இவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள். இவர்களின் வம்ச வரலாற்றில் அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர். |
| 29 | யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள். |
| 30 | இவனது மூத்த மகன் அப்தோன், மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப், |
| 31 | கேதோர், அகியோ, சேகேர் ஆகியோர். |
| 32 | மிக்லோத், சிமியாவின் தந்தை. இப்பிள்ளைகள் எருசலேமில் தம் உறவினர்களோடு வாழ்ந்தனர். |
| 33 | நேர், கீசின் தந்தை, கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான் மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தந்தை. |
| 34 | யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா. |
| 35 | மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் ஆகியோர். |
| 36 | ஆகாஸ் யோகதாவின் தந்தை. யோகதா, அலமேத்துக்கும் அஸ்மாவேத்துக்கும் சிம்ரிக்கும் தந்தை. சிம்ரி மோசாவின் தந்தை. |
| 37 | மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை. |
| 38 | ஆத்சேலுக்கு ஆறு மகன்கள். அவர்களின் பெயர்: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள். |
| 39 | ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் மகன் ஊலாம், அவனது இரண்டாவது மகன் ஏகூஸ், அவனது மூன்றாவது மகன் எலிபேலேத். |
| 40 | ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாகவில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும். இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள். |