வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
4அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.