பிரசங்கி (Ecclesiastes)

ஆசிரியர்

இப்புத்தகம் ஆசிரியரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆசிரியர் தன்னை 1:1-ல் 'பிரசங்கி' என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். தன்னைத் "தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கி" என்று கூறுகிறார் (1:1). "எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் ஞானமடைந்து, அநேக நீதிமொழிகளைச் சேர்த்தேன்" என்றும் குறிப்பிடுகிறார் (பிரசங்கி 1:16; 12:9). தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலை ஆட்சி செய்யச் சாலொமோனே சிங்காசனத்தில் அமர்ந்தார் (1:12). சாலொமோனே இதன் ஆசிரியர் என்பதற்கு இப்புத்தகத்திலுள்ள சில குறிப்புகள் ஆதாரமாக அமைகின்றன. சாலொமோனின் மரணத்திற்குப் பிறகு சில பகுதிகள் வேறு சிலரால் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எழுதப்பட்ட காலமும் இடமும் ஏறக்குறைய கி.மு. 940-க்கும் 931-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. இப்புத்தகம் சாலொமோனின் கடைசி நாட்களில், எருசலேமில் எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது இஸ்ரவேல் மக்களுக்கும், வேதத்தை வாசிக்கும் அனைவருக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம் இப்புத்தகம் நமக்கு ஒரு தெளிவான எச்சரிப்பைத் தருகிறது. நோக்கமில்லாமலும், தேவபயமின்றியும் வாழ்வது மாயையும், காற்றைப் பிடிப்பதுபோலவும் இருக்கிறது. நாம் இன்பம், செல்வம், ஞானம் மற்றும் புதிய காரியங்களை ஆராய்வதில் ஈடுபட்டாலும், நம் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டு. இறுதியில், நாம் மாயையிலே வாழ்ந்தோம் என்ற எண்ணமே நமக்குத் தோன்றும். நாம் தேவனுக்காக வாழும்போது மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.

மையக்கருத்து தேவனைத் தவிர மற்ற அனைத்தும் மாயையே.

பொருளடக்கம்

  1. முன்னுரை — 1:1-11

  2. வாழ்க்கையின் பல பாகங்களும் மாயைதான் — 1:12-5:7

  3. தேவனுக்குப் பயந்து நடக்க வேண்டும் — 5:8-12:8

  4. காரியத்தின் முடிவு — 12:9-14

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.