ஏசாயா 38:3-6 - BSI
3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
4
அப்பொழுது எசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
5
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
6
நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத்தப்புவித்து, இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.