வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 85

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும். யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அடிமைப்பட் டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
2கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்! அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!
3கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர்Ԕ நிறுத்தும். கடுங்கோபமாக இராதேயும்.
4எங்கள் தேவனும் இரட்சகருமானவரே, எங்க ளிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
5நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
6தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும். உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
7கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும். நீர் எங் களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.
8தேவனாகிய கர்த்ர்கூறியதை நான் கேட்டேன். அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர் களுக்கும் சமாதானம் உண்டா குமென்று கர்த் தர் கூறினார். எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
9தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார். நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த் தும்.
11பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையான வர்களாயிருப்பார்கள். பரலோகத்தின் தேவ னும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார். நிலம் பல நல்ல பயிர்களை விளை விக்கும்.
13நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும். அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.