Cursed be he that removeth his neighbour's landmark. And all the people shall say, Amen.
உபாகமம் 19:14
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக.
நீதிமொழிகள் 22:28
உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.
நீதிமொழிகள் 23:10
பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
நீதிமொழிகள் 23:11
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.