Seven
எண்ணாகமம் 29:12-38
12
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
13
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
14
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
15
பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
16
நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
17
இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
18
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
19
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
20
மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
21
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
22
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
23
நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
24
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
25
நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
26
ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
27
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
28
நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
29
ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
30
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
31
நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
32
ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
33
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
34
நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
35
எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
37
காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
38
நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
the eighth
2நாளாகமம் 7:8-11
8
அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,
9
எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.
10
ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடை கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.
11
இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும், தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமாயிற்று.
நெகேமியா 8:18
முதலாம் நாள்தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாணபுஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.
யோவான் 7:37
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
solemn
உபாகமம் 16:8
நீ ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யோவேல் 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
யோவேல் 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.