smite
லேவியராகமம் 13:29
புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
லேவியராகமம் 13:30
ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
லேவியராகமம் 13:43
ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,
லேவியராகமம் 13:44
அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
உபாகமம் 28:27
நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
வெளிப்படுத்தல் 16:2
முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.
discover
ஏசாயா 20:4
அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
ஏசாயா 47:2
ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.
ஏசாயா 47:3
உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.
எரேமியா 13:22
இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஒரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
எசேக்கியேல் 16:36
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
எசேக்கியேல் 16:37
இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,
எசேக்கியேல் 23:25-29
25
உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.
26
அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.
27
இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினையாமலும் இருப்பாய்.
28
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம்விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
29
அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும், நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.
மீகா 1:11
சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.
நாகூம் 3:5
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும், ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,