My son, keep thy father's commandment, and forsake not the law of thy mother:
நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதிமொழிகள் 1:9
அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
நீதிமொழிகள் 7:1-4
1
என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
2
என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
3
அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதயபலகையில் எழுதிக்கொள்.
4
இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
நீதிமொழிகள் 23:22
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
நீதிமொழிகள் 30:11
தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.
உபாகமம் 21:18
தன் தகப்பன் சொல்லையும், தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும்போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
உபாகமம் 27:16
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.