Wisdom resteth in the heart of him that hath understanding: but that which is in the midst of fools is made known.
நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 12:23
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
நீதிமொழிகள் 13:16
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
நீதிமொழிகள் 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
நீதிமொழிகள் 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
நீதிமொழிகள் 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
பிரசங்கி 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.