who them
யாத்திராகமம் 25:2-9
2
இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
3
நீங்கள் அவர்களிடத்தில் வாங்க வேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
4
இளநீலநூலும், இரத்தாம்பர நூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு மயிரும்,
5
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
6
விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
7
ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
8
அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.
9
நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
யாத்திராகமம் 35:5-9
5
உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
6
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும்,
7
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
8
விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
9
ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
எண்ணாகமம் 7:2
தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
எண்ணாகமம் 7:3
தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
எண்ணாகமம் 7:10-14
10
பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
11
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.
12
அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.
13
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
14
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:15-89
15
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
16
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
17
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.
18
இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
19
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு, எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
20
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
21
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
22
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
23
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.
24
மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
25
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
26
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
27
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
28
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
29
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய எலியாபின் காணிக்கை.
30
நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
31
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
32
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
33
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
34
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
35
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்காடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை.
36
ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
37
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிகலமும் ஆகிய இவ்விரண்டும்,
38
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
39
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
40
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
41
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேலின் காணிக்கை.
42
ஆறாம் நாளிலே தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
43
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
44
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
45
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
46
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
47
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை.
48
ஏழாம் நாளில் அம்மீயூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
49
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
50
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
51
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
52
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
53
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
54
எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
55
அவன் காணிக்கையாவது: போஜன பலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
56
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
57
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
58
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
59
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை.
60
ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
61
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
62
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
63
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
64
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
65
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை.
66
பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
67
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
68
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
69
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
70
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
71
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை.
72
பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
73
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
74
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
75
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
76
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
77
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை.
78
பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
79
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
80
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
81
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
82
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
83
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.
84
பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.
85
ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்று முப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது.
86
தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூப கரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.
87
சர்வாங்கதகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒருவயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும் கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.
88
சமாதானபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக் கடாக்கள் அறுபது; ஒருவயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.
89
மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.
எஸ்றா 1:4-6
4
அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.
5
அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்.
6
அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
எஸ்றா 2:68
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
எஸ்றா 2:69
அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
எஸ்றா 7:15
ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,
எஸ்றா 7:16
பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.