Cursed
2சாமுவேல் 13:15
பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.
2சாமுவேல் 13:22-28
22
அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
23
இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.
24
அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
25
ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.
26
அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.
27
அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.
28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.
நீதிமொழிகள் 26:24
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
நீதிமொழிகள் 26:25
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
நீதிமொழிகள் 27:3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
I will divide
யோசுவா 19:1-9
1
இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
2
அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
3
ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,
4
எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
5
சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
6
பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.
7
மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
8
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
9
சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.
யோசுவா 21:1-45
1
அப்பொழுது லேவியரின் வம்சப்பிதாக்களின் தலைவர்; கானான்தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்திலும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்துவந்து:
2
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
3
கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
4
கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
5
கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.
6
கெர்சோன் புத்திரருக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
7
மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.
8
இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள்.
9
லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,
10
யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன:
11
யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
12
பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.
13
இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,
14
யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,
15
ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
16
ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
17
பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும்,
18
ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
19
ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
20
லேவியரான கோகாத்தின் புத்திரரில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
21
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
22
கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
23
தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,
24
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
25
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
26
கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பத்து.
27
லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
28
இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதின் வெளிநிலங்களையும்,
29
யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
30
ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,
31
எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
32
நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
33
கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
34
மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும்,
35
திம்னாவையும் அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
36
ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும்,
37
கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
38
காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,
39
எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
40
இவைகளெல்லாம் லேவியரின் மற்றவம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
41
இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.
42
இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அததைச் சூழ்ந்த வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
43
இந்தப்பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
44
கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
45
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.
1நாளாகமம் 4:24-31
24
சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
25
இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
26
மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
27
சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.
28
அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,
29
பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,
30
பெத்தூவேலிலும், ஒர்மாவிலும், சிக்லாகிலும்,
31
பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.
1நாளாகமம் 4:39-31
1நாளாகமம் 4:40-31
1நாளாகமம் 6:65
சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.