வேதாகம வரலாறுகள்

ஆமோஸ்

தலைப்பு: 

ஏனைய சிறிய தீர்க்கதரிசிகள் புத்தகத்திற்கு தலைப்பிடுவது போலவே, தேவன் எந்த தீர்க்கதரிசிக்கு தம்முடைய வார்த்தையைத் தந்தாரோ (1:1) அவர்களின் பெயரை இடுவதுபோல, ஆமோஸின் பெயரே இப்புத்தகத்திற்கு இடப்பட்டுள்ளது. ஆமோஸ் என்ற பெயருக்கு “பாரம்” அல்லது “பாரம் சுமப்பவர்” என்று அர்த்தம். இவரை ஏசாயாவின் (ஏசா.1:1) தகப்பன் ஆமோத்சின் (பருமனான, பெலமான)  பெயர் போன்று இருப்பதால் குழப்பம் அடைந்து விடக்கூடாது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

ஆமோஸ் எருசலேமிற்கு தெற்கே 10 மைல் தொலைவில் இருக்கும் தெக்கோவா என்ற சிறிய கிராமத்தில் இருந்து வருகிறார். இவர் ஒருவரே அவருடைய தெய்வீக அழைப்பைத் தெரிவிப்பதற்கு முன் தான் உலகப்பிரகாரமாக என்ன தொழில் செய்தேன் என்று அறிவித்தவர். இவர் ஆசாரிய அல்லது மேல்மட்ட குலத்தின் வழிவந்தவர் அல்ல, இவர் ஆடுகளை ”மேய்ப்பவர்” (1:1 மற்றும் 2ராஜா.3:4) மற்றும் காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன் என்கிறார் (7:17); யோனா (2ராஜா.14:25), ஓசியா (1:1) மற்றும் ஏசாயா தீர்க்கதரிசிகளின் (1:1) சமகாலத்தவர். இந்த புத்தகம் எழுதப்பட்டது கி.மு.8-ஆம் நூற்றாண்டின் நடுமைய்ய நாட்கள், யூதாவின் ராஜா உசியா அரசாண்ட காலம், மேலும் இஸ்ரவேலில் யெரோபெயாம் – II (கி.மு.793-753) அரசாண்டவேளை, நிலநடுக்கம் (சகரியா 14:5) ஏற்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. 

பின்னணி மற்றும் அமைப்பு

இஸ்ரவேலின் வடக்கு பிராந்திய கோத்திரத்தாருக்கு தேவனின் செய்தியை அறிவிக்க வேண்டி ஏற்படுத்தப்பட்ட யூததீர்க்கதரிசி தான் ஆமோஸ் (7:15). யெரோபேயாம்-II நீண்ட மற்றும் பாதுகாப்பான ஆட்சியினால் தேசம் செழித்தோங்கி இருந்த நேரம், அவரது தகப்பன் யோவாஸை (2ராஜா.13:25) பின்பற்றி, இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக் கொண்ட நேரம் அது (2 ராஜா.14:25). அந்த நாட்கள் யூதா தேசத்துடன் சமாதானமாக இருந்த நாட்கள், மேலும் யோனா தீர்க்கதரிசியின் பிரசங்கத்தினால் மனம் திரும்பியிருந்த நினிவே பட்டணத்தாரால், இஸ்ரவேலின் தூரத்து அயலகத்தார், அசீரியரின் அச்சுறுத்தல் அடக்கப்பட்டிருந்தது (யோனா 3:10). ஆவிக்குரிய வாழ்விலோ – பரவலாக ஊழல் மலிந்திருந்ததும், ஒழுக்கம் சீர்குலைந்தும் இருந்த நாட்களாக இருந்தது (4:1; 5:10-13; 2ராஜா.14:24).

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

ஆமோஸ் இஸ்ரவேலரின் முக்கியமான இரண்டு பாவங்களை குறித்து பேசுகிறார், 1) மெய்யான ஆராதனை இல்லாமல் இருப்பது மற்றும் 2) நியாயம் இல்லாமல் போனது. அவர்கள் ஆராதனையின் சடங்குகளில் மூழ்கிப்போய், இறுதியில் முழு இருதயத்தோடு கர்த்தரைப் பின்பற்றவில்லை (4:4-5; 5:4-6); மேலும் அவர்கள் அயலகத்தாருடன் தேவனின் நீதியான நியமத்தைப் பின்பற்றவில்லை. இந்த துரோகம் அவர்கள் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே, ஆமோஸின் தெய்வீக நியாயத்தீர்ப்பு நிச்சயம் என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளை நிராகரித்ததால் வெளிப்பட்டது. அவருடைய உடன்படிக்கையினால், மொத்தமும் இஸ்ரவேலை தேவன் கைவிடுவதில்லை, மீந்திருக்கும் நீதியின் பிள்ளைகளுடன் எதிர்காலத்தில் தம்முடைய மறுசீரமைப்பை கொண்டு வருவார் (9:7-15) என்று முடிகிறது.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

9:12-ம் வசனத்தில், தேவன் “அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து” என வாக்குதத்தம் செய்கிறார். எருசலேம் ஆலோசனை சங்கத்தில், விருத்தசேதனம் இல்லாமல் புறஜாதியார்கள் சபைக்குள் நுழைய அனுமத்திக்கப்படலாமா என விவாதிக்கும் போது, யாக்கோபு இந்த வசனத்தை அப்போஸ்தலர் 15-ஆம் அதிகாரம் 15, 16-ஆம் வசனங்களில், பேதுருவுக்கு ஆதரவாக எடுத்துரைக்கிறார்; மேலும், எப்படி தேவன் ”புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி ” என்று 15:14 ஆம் வசனத்திலும் ஆமோஸின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். இதினால், சிலர் தாவீதின் குமாரனாகிய இயேசுவில் இந்த பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகள் நிறைவேறின எனக் குறிப்பிடுகின்றனர். இயேசுவின் மூலமாக தாவீதின் பேரரசு திரும்ப ஸ்தாபிக்கப்பட்டது. அப்போஸ்தலர் நடபடிகளில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு ஆமோஸின் வார்த்தைகளுக்குரிய நல்ல விளக்கம் எனவும் அது நிறைவேறுதலாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் ஒருசாரார் காண்கின்றனர். எதிர்கால நாட்களில் நிறைவேறும் குறிப்புகள் (அந்நாளில் - 9:11), ”ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு” (9:12) என்கிறது. மேலும் 9:15-ல் அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார். இவ்வார்த்தைகளெல்லாம் மேசியாவின் இரண்டாம்வருகையில், அவர் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிடுவார் என்பதையும் (ஏசாயா 9:7), அப்போஸ்தலர்களால் ஸ்தாபிக்கப்படும் சபையில் அல்ல என்பதையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

சுருக்கம்

1. தேசங்களுக்கு விரோதமாக எழும்பும் நியாயத்தீர்ப்புகள் (1:1-2:16)
அ. அறிமுகம் (1:1,2)
ஆ. இஸ்ரவேலரின் எதிரிகளுக்கு விரோதமாக (1:3-2:3)
இ.  யூதாவிற்கு விரோதமாக (2:4,5)
ஈ.  இஸ்ரவேலுக்கு விரோதமாக (2:6-16)
 
II.  இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிய ஆக்கினைதீர்ப்புக்கள் (3:1 -6:14)
அ. பொறுப்பற்ற தன்மை என்னும் பாவம் (3:1-15)
ஆ. விக்கிரக ஆராதனை என்னும் பாவம் (4:1-13)
இ. ஒழுக்கம் / நெறிமுறையில் வீழ்ச்சியடைந்த பாவம் (5:1 – 6:14)
 
III. நியாயத்தீர்ப்பு மற்றும் மறுசீரமைப்பின் தரிசனங்கள் (7:1 -9:15)
அ. கர்த்தர் காப்பாற்றுவர் (7:1-16)
1. வெட்டுக்கிளிகள் பற்றி தரிசனம் (7:1-3)
2. அக்கினி யைப் பற்றி தரிசனம் (7:4-6)
 
ஆ. இனிமேலும் கர்த்தர் காப்பாற்றமாட்டார் (7:7-9:10)
1. தூக்கு நூற்கு்ண்டு தரிசனம் (7:7-9)
2. வரலாற்றில் இடைச்சொருகல் (7:10-17)
3. பழக்கூடை தரிசனம் (8:1-14)
4. பலிபீட தரிசனம் (9:1-10)
 
இ. கர்த்தர் தாமே மீட்டு முன்நிலையில் வைப்பார் (9:11-15).

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.