தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

அறிமுக வரிகள்...

இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் ஆர்தர் வால்கிங்டன் பிங்க் (Arthur Walkington Pink) அவர்களின் பத்திரிக்கை ஊழியம் ஆற்றிய மிகமுக்கிய பங்கு மிகக்குறைந்த அளவே கண்டுகொள்ளப்பட்டது. 1921ல் அவர் ‘வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் முழுமையாக அவரே எழுதும் ஒரு மாதாந்திரப்பத்திரிக்கையைத் தொடங்கி, முப்பது ஆண்டுகள் அதை நடத்தினார். அந்த காலக்கட்டத்தில் அவருடைய ஒட்டுமொத்த வாசகர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருந்ததில்லை. இது ஆர்தர் பிங்க் அவர்களை சோர்வுறசெய்யவே இல்லை. பரவலாகக் காணப்பட்ட ஆவிக்குறிய பெலவீனத்திற்கான குறைபாடுகளை அவர் அறிந்திருப்பதாக அவர் நம்பியதால், அவருடைய பத்திரிக்கையை முழுவதுமாக படித்த உலகமெங்கிலுமிருந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு ஊழியம் செய்யும்படி தன்னையே எந்த தயக்கமுமின்றி அற்பணித்தார். கிறிஸ்தவர்களில் சிறந்த அறிவையும், பரிசுத்த வாழ்க்கையையும், ஜெபத்தையும், தேவபக்தியையும் ஏற்படுத்தும்விதத்தில் வேதவிளக்கமளிக்க வேண்டுமென்பதே அவருடைய குறிக்கோளாயிருந்தது.

1952ல் அவருடைய மரணத்திற்குப்பிறகு, அவர் உண்மையாகக் காத்துக்கொண்ட அந்த சத்தியத்தை அறியவேண்டுமென்ற ஆர்வம் தட்டியெழுப்பப்பட்டபொழுது, அவருடைய படைப்புகள் பரவலாக மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்து, பெரிதும் மதிக்கப்பட்டது. அவருடைய பத்திரிக்கையில் வெளிவந்த பல வேதவிளக்கங்கள் சமீபத்தில் உலகமுழுவதும் மறுபடியும் அச்சிடப்பட்டது.

அவருடைய படைப்புகள் வேதவிளக்கப் போதனையில் ஒரு எழுப்புதல் தீப்பொறியாயிருந்து அவருடைய வாசகர்களை பரிசுத்த ஜீவியத்திற்கு நேராய் வழி நடத்தியது. இந்த புத்தகத்தில் உள்ளக் கட்டுரைகளும் முதலாவதாக அவருடைய வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி என்ற மாதப்பத்திரிக்கையில் பிரசுரமானதே. இது ஆர்தர் பிங்க் அவர்கள் எழுதிய 'Profiting from the Word' என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம்.

இப்புத்தகம் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் அச்சுவடிவிலும் தயாராக உள்ளது. விலை ரூ. 60/- (அஞ்சல் வழியாக பெற விரும்பினால், தபால் செலவு ரூ.25 கூடுதல்). புத்தகம் தேவைப்படின் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்.

பொருளடக்கம்

  அறிமுகம்
 1. வேதவாக்கியங்களும் பாவமும்
 2. வேதவாக்கியங்களும் தேவனும்
 3. வேதவாக்கியங்களும் கிறிஸ்துவும்
 4. வேதவாக்கியங்களும் ஜெபமும்
 5. வேதவாக்கியங்களும் நற்கிரியைகளும்
 6. வேதவாக்கியங்களும் கீழ்ப்படிதலும்
 7. வேதவாக்கியங்களும் உலகமும்
 8. வேதவாக்கியங்களும் வாக்குத்தத்தங்களும்
 9. வேதவாக்கியங்களும் சந்தோஷமும்
 10. வேதவாக்கியங்களும் அன்பும்