தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

எங்கள் விசுவாசம்

நாங்கள் புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் அடங்கிய பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்றும், அது அதன் மூல மொழியில் தவறில்லாமல் இருக்கிறது என்றும், மனிதனுடைய இரட்சிப்பிற்காக அது தேவனுடைய வெளிப்பாடு என்றும், கிறிஸ்தவ விசுவாசத்திற்கும், வாழ்க்கைக்கும் அதுவே அடிப்படை என்றும் விசுவாசிக்கிறோம்.

நாங்கள், எல்லாவற்றையும் படைத்த, முடிவில்லாத, பரிசுத்தமான, சதாகாலத்திற்கும் வாசம் செய்யும் ஒரே தேவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று நபர்களாக இருக்கின்றார் என்பதை விசுவாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்த்து முழுவதும் தேவன், முழுவதும் மனிதர் என்றும், பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்தார் என்றும், வேதவாக்கியங்களின் படி நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்.

மேலும், அவர் சரீரப்பிரகாரமாக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பரமண்டலத்துக்கு ஏறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும், அவர் இப்பொழுது பிரதான ஆசாரியர் மற்றும் நமக்காக பரிந்து பேசுகிறார் என்பதையும் விசுவாசிக்கிறோம்.

பரிசுத்த ஆவியானவரின் செயல்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது, மனிதர்களின் பாங்களை கண்டித்து உணர்த்துவது, பாவியை மறுபிறப்படைய செய்து அவனுள் வாசம் செய்வது, அவனுடைய பரிசுத்த கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவனுக்கு வழிகாட்டி வல்லமைப்படுத்துவது என்பதை விசுவாசிக்கிறோம்.

சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் மட்டுமே விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பையும், நீதியையும் தருகிறது என்றும், அப்படி விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே இயேசு கிறிஸ்துவை எற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள் என்றும் விசுவாசிக்கிறோம்.

உண்மையான சபை என்பது, இந்த கிறிஸ்துவுக்குள் இரட்சிக்கும் விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் மறுபடியும் பிறந்தவர்களை உள்ளடக்கியது என்றும் அவர்கள் கிறிஸ்துவே தலையாயிருக்கும் அவருடைய சரீரத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் விசுவாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து மீண்டும் ராஜாதி ராஜாவாக, நியாயாதிபதியாக வரப்போகிறார் என்றும், இந்த நம்பிக்கை ஒரு விசுவாசியின் தனிப்பட்ட ஆவிக்குறிய வாழ்க்கைக்கும் அடிப்படையானது என்பதை விசுவாசிக்கிறோம்.

மரித்தவர்களின் சரீர உயிர்த்தெழுதலையும், விசுவாசிகள் தேவனுடன் நித்தியமாக பரலோகத்தில் வாழப்போகிறார்கள் என்றும், அவிசுவாசிகள் நியாயந்தீர்க்கப்பட்டு நித்திய நரகத்திற்குள்ளாக தள்ளப்படுவார்கள் என்றும் விசுவாசிக்கிறோம்.