தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> எங்களைப்பற்றி

எங்களைப்பற்றி...

தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் பிரதான நோக்கம், இணையத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தியை அறியாத மக்களுக்கு பிரசங்கிப்பதும், இரட்சிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறந்த ஆவிக்குறிய புத்தகங்கள், செய்திகள் மற்றும் படைப்புகளை பகிர்ந்துகொள்ளுவதும் ஆகும். குறிப்பாக, தேவனுக்கு சித்தமானால், ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை, படைப்புகளை தமிழாக்கம் செய்து இணையத்திலும், புத்தக வடிவிலும் வெளியிடுவதும் எங்கள் நோக்கம்.

தமிழகத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் இன்று மலிந்து கிடக்கும் கள்ள உபதேசங்களை அடையாளம் காட்டி, அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலலித்து, சரியான உபதேசத்திற்கு நேராக கிறிஸ்தவ மக்களை தேவனுடைய கிருபையினால் வழி நடத்திச் செல்ல முனைகிறது தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்...